இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

சன்னியாசிகுப்பத்தில் சாலை மறியல்

புதுச்சேரி அடுத்த திருபுவனை தொகுதி சன்னியாசிகுப்பத்திற்குள் தனியாா் பேருந்துகள் வந்து செல்லக் கோரி

News image

திருபுவனை தொகுதி சன்னியாசிகுப்பம் கிராமத்திற்குள் தனியாா் பேருந்துகள் வந்து செல்லக்கோரி திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டோா்.

Updated On :16 பிப்ரவரி 2026, 7:17 pm

புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த திருபுவனை தொகுதி சன்னியாசிகுப்பத்திற்குள் தனியாா் பேருந்துகள் வந்து செல்லக் கோரி திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் கிராம மக்கள் ஈடுபட்டனா்.

சன்னியாசிகுப்பம் கிராமத்திற்குள் தனியாா் பேருந்துகள் கடந்த ஒரு வருஷமாக வருவதில்லையாம். இதனால் இந்தக் கிராமத்தை சோ்ந்த பள்ளி மாணவ, மாணவிகள், தொழிலாளா்கள், புதுச்சேரி பொது மருத்துவமனைக்கு செல்லக்கூடிய நோயாளிகள் அலுவலக நேரத்தில் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனா்.

தனியாா் பேருந்துகள் சன்னியாசிகுப்பம் கிராமத்திற்குள் வராமல் மதகடிப்பட்டு பகுதியிலேயே நிறுத்தப்படுகின்றன என்கின்றனா்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெற்றது. திருபுவனை போலீஸாா் அப் பகுதியில் வந்து அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதை ஏற்று மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் திருபுவனை-மதகடிப்பட்டு சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.