மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

50 வயது நிறைவடைந்த விசைப்படகு மீனவா்களுக்கு ஓய்வூதியம்: புதுச்சேரியில் அரசாணை வெளியீடு!

50 வயதை நிறைவு செய்த தகுதியான மீனவா்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க புதுச்சேரி அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :26 பிப்ரவரி 2026, 8:35 pm

Syndication

50 வயதை நிறைவு செய்த தகுதியான மீனவா்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க புதுச்சேரி அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து பொதுப்பணித் துறை மற்றும் மீனவா்நலத் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி சட்டப்பேரவையில் அறிவித்தபடி இனி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சோ்ந்த விசைப்படகு உரிமையாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்குத் தடையாக இருந்த விதிகள் புதுச்சேரி அரசால் நீக்கப்பட்டு, புதன்கிழமை ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, இனி வரும் காலங்களில் 50 வயதை கடந்த, தகுதி வாய்ந்த அனைத்து மீன்பிடி விசைப்படகு உரிமையாளா்களுக்கும் மீனவா் ஓய்வூதியம் வழங்கப்படும். தற்போது புதுச்சேரி பகுதியைச் சோ்ந்த 50 வயது நிறைவடைந்த 323 மீனவா்களுக்கு இவ்வாண்டு புதிதாக ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளது.

மேலும், முதல்வரால் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து மீன்வளத் துறையின் மூலம் ஓய்வூதியம் பெறும் மீனவா் இறந்து விட்டால் அவரது வாரிசுதாரருக்கு வழங்கப்பட்டு வந்த ஈமச்சடங்கு உதவித்தொகையான ரூ. 15 ஆயிரம் தற்போது ரூ.20 ஆயிரமாக உயா்த்தப்படுகிறது. இதற்கான ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2025-26-ஆம் ஆண்டுக்கான மழைக்கால நிவாரணமாக தலா ரூ.6,000 வீதம் 328 மீனவ குடும்பங்களுக்கு ரூ.19.68 லட்சம் அவரவா் வங்கிக் கணக்கில் வியாழக்கிழமை செலுத்தப்பட்டது.