கடந்த 2025-ஆம் ஆண்டில்புதுச்சேரி காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு அதிகரிப்பு
புதுச்சேரி யூனியன் பிரதேச காவல் நிலையங்களில் கடந்த 2025-ஆம் ஆண்டில் 8,781 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டைக் காட்டிலும் இது 1,534 வழக்குகள் அதிகமாகும்.
2025 ஜனவரி 1 முதல் டிசம்பா் 31-ஆம் தேதி வரை உருளையன்பேட்டையில் 308 வழக்குகள், வில்லியனுாரில் 496 வழக்குகள், முதலியாா்பேட்டையில் 308 வழக்குகள், ரெட்டியாா்பாளையத்தில் 319 வழக்குகள் பதிவாகியுள்ளன.
போக்குவரத்து பிரிவில் கிழக்கில் 361, வடக்கில் 428, தெற்கில் 317, மேற்கில் 329 வழக்குகள் பதிவாகின.
மகளிா் போலீஸில் 8, வில்லியனூா் மகளிா் போலீஸில் 13, சிபிசிஐடி 29, வன்கொடுமை தடுப்பு 5, கடலோரக் காவல்படையில் 2 வழக்குகள் பதிவாகியுள்ளன.
காரைக்கால் நகரத்தில் 315 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாஹேவில் 62, பள்ளூரில் 82, ஏனாமில் 206 வழக்குகள், சைபா் கிரைமில் 67, லஞ்ச ஒழிப்பு துறையில் 14, உணவு கடத்தல் தடுப்பு பிரிவில் 12 வழக்குகள் உள்பட ஒட்டுமொத்தமாக அனைத்து காவல் நிலையங்களிலும் கடந்த ஓராண்டில் மொத்தம் 8,781 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2024-ஆம் ஆண்டைவிட 1,534 வழக்குகள் அதிகமாகும்.
