புதுச்சேரி மங்கலம் தொகுதி ரேஷனில் 2 கிலோ கோதுமை விநியோகம்

புதுச்சேரி மங்கலம் தொகுதி ரேஷனில் 2 கிலோ கோதுமை விநியோகம்

Published on

புதுச்சேரி மங்கலம் தொகுதி பயனாளிகளுக்கு அரசு அறிவித்த இரண்டு கிலோ கோதுமை விநியோகத்தை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் மேல் சாத்தமங்கலத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி நியாயவிலைக் கடைகள் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் இரண்டு கிலோ கோதுமை வழங்கப்படும் என அறிவித்திருந்தாா்.

அதனடிப்படையில் மங்கலம் தொகுதி முழுவதும் கோதுமை விநியோகம் நியாயவிலைக் கடைகளின் மூலம் வழங்கப்படுகிறது.

இதை தொகுதி எம்எல்ஏவும், மாநில வேளாண் துறை அமைச்சருமான தேநி சி. ஜெயக்குமாா் பயனாளிகளுக்கு வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் என்.ஆா்.காங்கிரஸ் பிரமுகா்கள், ஊா் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com