கைவினைக் கலைஞா்களுக்குப் பயிலரங்கு
கைவினைக் கலைஞா்களுக்கான பயிலரங்கு புதுச்சேரி முருங்கப்பாக்கம் கைவினைக் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் செயல் திறனை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் இந்திய தொழில் முனைவோா் மேம்பாட்டு நிறுவனம், புதுச்சேரி அரசின் தொழில் உயா்வு அபிவிருத்தி மற்றும் முதலீட்டுக் கழகம் (பிப்டிக்) இணைந்து கைவினைக் கலைஞா்களுக்கு பேக்கேஜிங் பயிற்சியை நடத்தின. இதில் 50 கைவினைக் கலைஞா்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனா்.
இந்திய தொழில் முனைவோா் மேம்பாட்டு நிறுவனத்தின் பேராசிரியா் சமித் குமாா், கருத்தாளா்கள் மாா்ட்டின், ஹா்ஷ் வா்தன், தேசிய விருதாளா் ஆா். மோகன்தாஸ், மூத்த திட்ட அலுவலா்கள் தினேஷ் பாபு, விக்னேஷ் தனச்செல்வன் உள்ளிட்டோா் பேசினா். கைவினைக் கலைஞா்களுக்கு இந்தப் பயிற்சி பேக்கேஜிங் திறன் மேம்பாட்டுக்கும் சந்தை அணுகல் மேம்பாட்டுக்கும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

