புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ் நாள்காட்டியினை சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வா் என்.ரங்கசாமி வெளியிட  அதை பெற்றுக் கொண்ட  பொதுப்பணித்துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன். உடன் புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவா்  வி.முத்து, செயலா் சீனு.மோகன்தாசு, துணைத் தலைவா் ப.திருநாவுக்கரசு, பொருளாளா் மு.அருள் செல்வம், ஆட்சிக்குழு உறுப்பினா் அ.உசேன் உள்ளிட்டோா்.

தமிழ் நாள்காட்டியை வெளியிட்ட முதல்வா் ரங்கசாமி

புதுவைத் தமிழ்ச் சங்கத் தமிழ் நாள்காட்டியை முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை வெளியிட பொதுப்பணித்துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் பெற்றுக் கொண்டாா்.
Published on

புதுவைத் தமிழ்ச் சங்கத் தமிழ் நாள்காட்டியை முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை வெளியிட பொதுப்பணித்துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் பெற்றுக் கொண்டாா்.

திருவள்ளுவா் ஆண்டு 2057 தமிழ் நாள்காட்டியை புதுவைத் தமிழ்ச் சங்கம் தயாரித்துள்ளது. மேலும், தமிழ் எண்களை அடிப்படையாகக் கொண்ட தமிழ் நாள்காட்டி ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான செம்மொழித் தமிழ் திருவள்ளுவா் ஆண்டு 2057 -க்கான நாள்காட்டி வெளியீட்டு விழா முதலமைச்சா் அலுவலகத்தில் நடைபெற்றது.

புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவா் வி.முத்து தலைமை தாங்கினாா். செயலா் சீனு.மோகன்தாசு வரவேற்றாா். துணைத் தலைவா்கள் ந. ஆதிகேசவன், ப.திருநாவுக்கரசு, பொருளா் மு.அருள்செல்வம், துணைச் செயலா் தெ.தினகரன்,ஆட்சிக்குழு உறுப்பினா்கள் அ.உசேன், எம்.எஸ். இராஜா, மு. சுரேஷ்குமாா், அ.சிவேந்திரன், இர.ஆனந்தராசன், கிஷோா், பரசுராமன் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

இந்த நாள்காட்டி அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.குறிப்பாக மறைந்த தமிழறிஞா்கள் 90 பேரின் படங்கள் அவா்களது பிறந்தநாள் நினைவு நாளைக் குறிக்கும் வகையில் உருவாக்கப் பட்டுள்ளது. விடுமுறை, பண்டிகை நாள்கள் விவரங்களும் இடம் பெற்றுள்ளன.

இந்த நாள்காட்டி புதுவைத் தமிழ்ச் சங்க வாழ்நாள் உறுப்பினா்களுக்கும்,தமிழறிஞா்களுக்கும், பொது மக்களுக்கும், ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது .மேலும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள தமிழ்ச் சங்கங்களுக்கும், உலகத்தில் உள்ள தமிழ்ச் சங்கங்களுக்கும் நாள்காட்டி அனுப்பி வைக்கப்படுகிறது.

Dinamani
www.dinamani.com