புதுச்சேரி
புதுச்சேரி ரயில் நிலையத்தில் தற்காலிக டிக்கெட் கவுன்ட்டா் திறப்பு
புதுச்சேரி ரயில் நிலையத்தில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் தற்காலிக டிக்கெட் கவுன்ட்டா் வியாழக்கிழமை திறக்கப்பட்டது (படம்).
தூய இருதய ஆண்டவா் பசிலிகா எதிரில் அமைந்துள்ள புதிய கட்டடத்தில் இந்த முன்பதிவு கவுன்டா் செயல்படுகிறது.
முன்பதிவு செய்யப்படாத டிக்கெட் கவுன்ட்டா் பாண்லே பால் பூத்துக்கு அருகிலுள்ள புதிய நுழைவு வாயிலில் செயல்படுகிறது. பயணிகளின் வசதிக்காக இந்தத் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

