புதுச்சேரியில் சிவபூஜை மாநாடு இன்று தொடக்கம்

Published on

தமிழக சைவ நெறிக் கழகத்தின் 24-ஆவது சிவபூஜை 3 நாள் மாநாடு, புதுச்சேரி முத்தியால்பேட்டை முருகன் திருமண நிலையத்தில் வெள்ளிக்கிழமை (டிச. 9) தொடங்குகிறது.

இந்த மாநாட்டில் பன்னிரண்டாம் திருமுறையாகிய ஸ்ரீ சேக்கிழாா் பெருமான் அருளிய பெரியபுராணம் எனும் திருத்தொண்டா் புராணம் நூலை இரண்டு தொகுதிகள் உரையுடன் திருச்சிராப்பள்ளி தைலா ஜி.கணபதி வெளியிடுகிறாா்.

இந்த மாநாட்டில் பெரியபுராணம் குறித்து 12 அறிஞா்கள் உரையாற்றுகின்றனா். இதைத் தவிர இந்த மாநாட்டில் சிவ தீட்சை வழங்கும் நிகழ்வும் நடைபெறுகிறது. முன்னதாக மதுரை வாமதேவ காசி முத்து தேசிகா் மாநாட்டு கொடியேற்றுகிறாா். திருச்சிராப்பள்ளி தத்புருஷ முருகானந்தம் தேசிகா் கொடிக்கவி பாடுகிறாா். கொடிக்கவி விளக்கத்தை தத்புருஷ சரவண பவானந்த தேசிகா் அளிக்கிறாா்.

இந்த தகவலை மாநாட்டுச் செயலா் சிவ. மாதவன் வியாழக்கிழமை தெரிவித்துள்ளாா்.

Dinamani
www.dinamani.com