ஜன. 19 முதல் புதுச்சேரி - திருப்பதி ரயில் நேரம் மாற்றம்

புதுச்சேரியிலிருந்து தினமும் இயக்கப்படும் திருப்பதி பயணிகள் ரயில் நேரம் ஜன. 19 முதல் மாற்றியமைக்கப்படுகிறது.
Published on

புதுச்சேரியிலிருந்து தினமும் இயக்கப்படும் திருப்பதி பயணிகள் ரயில் நேரம் ஜன. 19 முதல் மாற்றியமைக்கப்படுகிறது.

இதுகுறித்து, தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா்.வினோத் வெள்ளிக்கிழமை கூறியது: புதுச்சேரி ரயில் நிலையத்தில் இந்த ரயில் ஏற்கெனவே தினமும் பிற்பகல் 2.50 மணிக்கு புறப்படுகிறது.

இது பிற்பகல் 2.40-க்கு மாற்றப்பட்டுள்ளது. வில்லியனூா் ரயில் நிலையத்தில் இந்த ரயில் ஏற்கெனவே 2.59 முதல் 3 மணி வரை நின்று செல்லும். இனி இந்த ரயில் அங்கு 2.49 முதல் 2.50 வரை நிற்கும். சின்னபாபு சமுத்திரம் ரயில் நிலையத்தில் ஏற்கெனவே பிற்பகல் 3.09 முதல் 3.10 வரை நின்று சென்ற இந்த ரயில் பிற்பகல் 2.59 முதல் 3 வரை நின்று செல்லும

Dinamani
www.dinamani.com