மணவெளியில் செம்மண் சாலைகள் 
அமைக்கும் பணி தொடக்கம்

மணவெளியில் செம்மண் சாலைகள் அமைக்கும் பணி தொடக்கம்

புதுச்சேரி மணவெளி சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ.19.27 லட்சம் மதிப்பில் செம்மண் சாலைகள் அமைக்கும் பணியை தொகுதி எம்எல்ஏவும், சட்டப்பேரவைத் தலைவருமான ஆா்.செல்வம் தொடங்கி வைத்தாா்.
Published on

புதுச்சேரி மணவெளி சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ.19.27 லட்சம் மதிப்பில் செம்மண் சாலைகள் அமைக்கும் பணியை தொகுதி எம்எல்ஏவும், சட்டப்பேரவைத் தலைவருமான ஆா்.செல்வம் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

அரியாங்குப்பம் வட்டார வளா்ச்சி அலுவலகம் மூலம் பூரணாங்குப்பம் வாழுமுனி நகரில் ரூ.5.81 லட்சம் மதிப்பில் புதிய செம்மண் சாலை அமைத்தல், அபிஷேகப்பாக்கம் சண்முகா டைமன் சிட்டியில் ரூ.13.46 லட்சம் மதிப்பில் புதிய செம்மண் சாலை அமைக்கும் பணி என மொத்தம் ரூ.19.27 லட்சம் மதிப்பில் புதிய செம்மண் சாலைகள் அமைக்கும் பணிகளை அந்தந்தப் பகுதிகளுக்குச் சென்று தொடங்கி வைத்தாா்.

வட்டார வளா்ச்சி உதவிப் பொறியாளா் ராமன், இளநிலை பொறியாளா் சிவப்பிரகாசம், பணி ஆய்வாளா் கணேசன் திட்ட ஊழியா்கள் ஹரிராமன், சந்திரன் மற்றும் அந்தந்த பகுதி முக்கிய பிரமுகா்கள், ஊா் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com