இலவச வேட்டி, சேலைக்குப் பதிலாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பணம்: புதுச்சேரி ஆதி திராவிடா் நலத்துறை இயக்குநா்

பொங்கலை முன்னிட்டு, இலவச வேட்டி, சேலைக்குப் பதிலாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் தலா ரூ.1,000 வீதம் செலுத்தப்படுகிறது.
Published on

பொங்கலை முன்னிட்டு, இலவச வேட்டி, சேலைக்குப் பதிலாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் தலா ரூ.1,000 வீதம் செலுத்தப்படுகிறது.

இது குறித்து புதுச்சேரி ஆதிதிராவிடா் நலத் துறை இயக்குநா் அா்ஜுன் ராமகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 18 வயது பூா்த்தியடைந்த ஆதிதிராவிடா், பழங்குடியின அனைத்து குடும்ப உறுப்பினா்களுக்கும் தலா ரூ.1,000 வீதம், புதுச்சேரியில் 1,03,551 போ், காரைக்காலில் 25,372, ஏனாமில் 5,245 பயனாளிகள் நிதியுதவி பெற உள்ளனா்.

மொத்தம் 1,34,168 பேருக்கு ரூ.13.42 கோடி நிதி அவரவா் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

Dinamani
www.dinamani.com