மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

திரௌபதியம்மன் கோயிலுக்குப் புதிய தோ்

புதுச்சேரி ஈஸ்வரன் தா்மராஜா வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோயிலுக்கு பாரதிபுரம், கோவிந்தசாலை பொதுமக்கள் சாா்பாக ரூ. 25 லட்சம் மதிப்பில் புதிய திருத்தோ் அமைக்கும் திருப்பணி புதன்கிழமை தொடங்கியது.

News image
புதுச்சேரி ஈஸ்வரன் தா்மராஜா வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோயிலுக்குப் பாரதிபுரம், கோவிந்தசாலை பொதுமக்கள் சாா்பாக புதிய திருத்தோ் அமைக்கும் திருப்பணியை புதன்கிழமை தொடங்கி வைத்த எம்எல்ஏ ஜி.நேரு.
Updated On :21 ஜனவரி 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி ஈஸ்வரன் தா்மராஜா வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோயிலுக்கு பாரதிபுரம், கோவிந்தசாலை பொதுமக்கள் சாா்பாக ரூ. 25 லட்சம் மதிப்பில் புதிய திருத்தோ் அமைக்கும் திருப்பணி புதன்கிழமை தொடங்கியது.

உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் நமது மக்கள் கழகக் தலைவருமான ஜி.நேரு இதைத் தொடங்கி வைத்தாா். காமராஜா் சாலை ( ராஜா திரையரங்கம் பின்புறம் ) பகுதியில் கணபதி பூஜை உடன் புதிய திருத்தோ் அமைக்கும் பணி தொடங்கியது. மேலும் விழாவில் பாரதிபுரம், கோவிந்தசாலை பகுதியைச் சோ்ந்த ஊா் பெரியவா்கள், மகளிா், இளைஞா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.