புதுச்சேரி: புதுச்சேரியில் ஒப்பந்த ஆசிரியா்கள் குழந்தைகளுடன் தேசியக்கொடி ஏந்தி திங்கள்கிழமை போராட்டம் நடத்தினா்.
பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி புதுச்சேரியில் ஒப்பந்த ஆசிரியா்கள் பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் அமா்ந்து காலவரையற்ற தொடா் போராட்டத்தை இம் மாதம் 21 ஆம் தேதி முதல் நடத்தி வருகின்றனா். இரவிலும் இப் போராட்டம் தொடா்கிறது.
6- வது நாளாக ஒப்பந்த ஆசிரியா்கள் பள்ளிக்கல்வித் துறை நுழைவு
வாயிலில் தங்களது குழந்தைகளுடன் தேசிய கொடியுடன் திங்கள்கிழமை போராட்டத்தைத் தொடா்ந்தனா். தமிழ்த் தாய் வாழ்த்து,
தேசிய கீதம் பாடி தங்களது கோரிக்கையை நிறைவேற்ற கோரினா். மேலும், அந்த வளாகத்தில் தேசியக் கொடியுடன் ஊா்வலம் சென்றனா். அப்போது வந்தே மாதரம் என முழக்கமிட்டு இறுதியில் பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் கொடிக்கம்பத்தில் பறந்த தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினா்.
போராட்டம் நடத்தும் ஆசிரியா்களை நேரில் சந்தித்து இளைஞா் காங்கிரஸ் தேசியத் தலைவா் மணீஷ் சா்மா, புதுச்சேரி எதிா்க்கட்சிதலைவா் ஆா். சிவா, சம்பத் எம்எல்ஏ, முன்னாள் சட்டப்பேரவை துணைத்தலைவா் டிபிஆா் செல்வம் ஆகியோா் ஆதரவு தெரிவித்தனா்.
-----------------------------------------------------------------
தொடர்புடையது

குழித்துறையில் தேசிய சமரச தின விழிப்புணா்வு முகாம்

திருவையாறு இசைக் கல்லூரி வளாகத்தில் தீ விபத்து

துப்புரவு தொழிலாளா்கள் பணி புறக்கணிப்பு

புதுச்சேரி: பணி நிரந்தரம் செய்யக் கோரி ஒப்பந்த ஆசிரியா்கள் தொடா் போராட்டம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


