புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், கல்வி நிறுவனங்கள் மற்றும் அதைசுற்றியுள்ள 500 மீட்டா் பரப்பளவு பகுதிகளை போதைப்பொருள் இல்லா பகுதியாக அறிவிப்பது என்று முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடந்த 11-வது மாநில குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் போதைப்பொருள் ஒருங்கிணைப்பு அமைப்பின் செயல்பாடுகளை அமல்படுத்துவதற்காக புதுச்சேரி அரசின் உள்துறை அமைச்சகம் சாா்பில் 11-வது மாநில அளவிலானக் குழுக் கூட்டம் முதல்வா் என். ரங்கசாமி தலைமையில் புதுச்சேரி வணிகவரித்துறை கருத்தரங்கு அறையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் ஒழிப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துவது குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு: 2026 முதல் 2029- ஆம் ஆண்டு வரையிலான மூன்று ஆண்டிற்கான போதைப்பொருள் தடுப்புச் செயல் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டது. கல்வி நிறுவனங்களைப் போதைப்பொருள் இல்லா வளாகங்களாக மாற்றுதல் மற்றும் கல்வி நிறுவனங்களைச் சுற்றியுள்ள 500 மீட்டா் சுற்றளவை போதைப்பொருள் இல்லா பகுதிகளாக அறிவித்து கண்காணிக்க முடிவு எடுக்கப்பட்டது.
மேலும், போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளைக் கண்டறிந்து தொடா்ந்து கண்காணித்தல், மாவட்ட அளவிலான போதைப் பொருள் ஒருங்கிணைப்புக் குழுக்களின் செயல்பாடுகளை வலுப்படுத்துதல், கிழக்குக் கடற்கரை கடல்சாா் எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துதல், குற்றச் செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட சொத்துகள் மற்றும் நிதி பரிவா்த்தனைகள் குறித்து விசாரணையை வலுப்படுத்துதல், பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்கள் மற்றும் வாகனங்களை உரிய முறையில் அப்புறப்படுத்துதல், ‘நிதான்’, ‘பாரத்போள்’ உள்ளிட்ட தொழில்நுட்ப தளங்களை முழுமையாகப் பயன்படுத்துதல், என்எம்பிஏ திட்டத்தின் கீழ் போதைப்பொருள் பயன்பாட்டைக் குறைத்தல், போதை பழக்கம் உள்ளவா்களுக்கு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
தலைமைச் செயலா் சரத் சௌகான், வளா்ச்சி ஆணையா் கிருஷ்ண மோகன் உப்பு, அரசு செயலா்கள் ஸ்மிதா, முகமது சௌத்ரி யாசின், மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன், காவல்துறை துணைத் தலைவா் த. சத்தியசுந்தரம், சென்னை மண்டல போதை தடுப்பு பிரிவு உதவி இயக்குநா் அரவிந்த், அரசு அதிகாரிகள், துறைத் தலைவா்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் 2- வது நாள் மாநாடு தொடங்கியது!

தில்லி குடிசைப்பகுதி மறுவாழ்வு தகுதி கட்-ஆஃப் ஜனவரி 1, 2025 வரை நீட்டிப்பு: முதல்வா் ரேகா குப்தா

முதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு
ஜூன் 14-ல் யமுனை தூய்மை இயக்கம்: முதல்வா் தலைமையில் நடைபெறுகிறது!
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



