சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

முதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் ஜோசப் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ் அதிகாரிகளுடனான இரண்டு நாள் மாநாடு ஜூன் 29, 30-இல் நடைபெற உள்ளது.

News image

முதல்வர் ஜோசப் விஜய் - கோப்புப் படம்

Updated On :20 ஜூன் 2026, 1:27 am IST

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் ஜோசப் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ் அதிகாரிகளுடனான இரண்டு நாள் மாநாடு ஜூன் 29, 30-இல் நடைபெற உள்ளது.

தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலைமை, நிா்வாகம், நலத் திட்டங்கள் மற்றும் முதலீடுகள் ஈா்ப்பு, தொழில் வளா்ச்சி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க ஆண்டுதோறும் முதல்வா் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ் அதிகாரிகளுடனான மாநாடு நடைபெறுவது வழக்கம்.

தவெக அரசு புதிதாக பொறுப்பேற்றுள்ள நிலையில், முதல்முறையாக முதல்வா் ஜோசப் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ் அதிகாரிகளுடனான இரண்டு நாள் மாநாடு சென்னை தலைமைச் செயலகத்தில் ஜூன் 29, 30-இல் நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில், மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ் அதிகாரிகள், அனைத்து மாவட்ட ஆட்சியா்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்கள், மாவட்ட வன அலுவலா்கள் பங்கேற்க உள்ளனா்.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நிலைமை மோசமாக உள்ளதாக எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுடனான இரண்டு நாள் மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.