தவெக சார்பில் ஜூலை 1-இல் தோழமைக் கட்சிகள் கூட்டம்தமிழகத்தில் இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு ஜூலை 1-இல் ஜிஎஸ்டிக்கு வயது 10: ஏஐ மூலம் செயல்திறனை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை!சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பென் ஸ்டோக்ஸ் ‘திடீர்’ ஓய்வு!
/

முதல்வர் விஜய் தலைமையில் இன்றும் நாளையும் ஐஏஎஸ், ஐபிஎஸ் மாநாடு

முதல்வர் விஜய் தலைமையில் இன்றும் நாளையும் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் அதிகாரிகளுக்கான மாநாடு நடைபெறுகிறது.

News image

முதல்வர் விஜய் - கோப்புப் படம்

Updated On :29 ஜூன் 2026, 9:07 am IST

முதல்வர் விஜய் தலைமையில் இன்றும் நாளையும் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் அதிகாரிகளுக்கான மாநாடு நடைபெறுகிறது.

மொத்தம் 3 அமர்வுகளாக நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த மாநாட்டின் முதல் அமர்வில், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பங்கேற்று ஆலோசனையில் ஈடுபடுகின்றனர்.

சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள் இல்லாத தமிழகம், திட்டங்களின் நிலை குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படவிருக்கிறது. மேலும் அரசின் திட்டங்கள் மக்களுக்கு முறையாக சென்றடைகிறதா? உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் மாநாட்டில் ஆலோசிக்கி உள்ளார்.

இரண்டு நாட்களாக நடைபெறும் இந்த மாநாட்டின் 3 அமர்வுகளும் நிறைவடைந்த பிறகு, இறுதிநாளில் அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை முதல்வர் விஜய் வழங்கவுள்ளார்.

இந்த மாநாட்டில் தமிழக டிஜிபி, பல்வேறு அரசுத் துறைகளின் செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், எஸ்பிக்கள், டிஐஜிக்கள் மற்றும் ஐஜிக்கள் உள்ளிட்ட முக்கிய உயர் அதிகாரிகள் அனைவரும் பங்கேற்கின்றனர்.

Summary

Chief Minister Vijay to chair the conference for IAS, IPS, and IFS officers today and tomorrow.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.