காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

ஜூன் 14-ல் யமுனை தூய்மை இயக்கம்: முதல்வா் தலைமையில் நடைபெறுகிறது!

யமுனை நதியை தூய்மைப்படுத்தும் இயக்கம் முதல்வா் ரேகா குப்தா தலைமையில் ஜூன் 14-ஆம் தேதி நடைபெறுகிறது.

News image

தில்லி முதல்வர் ரேகா குப்தா - கோப்புப் படம்

Updated On :8 ஜூன் 2026, 2:50 am IST

யமுனை நதியை தூய்மைப்படுத்தும் இயக்கம் முதல்வா் ரேகா குப்தா தலைமையில் ஜூன் 14-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுதொடா்பாக முதல்வா் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ‘யமுனை என்பது வெறும் நதி மட்டுமல்ல, அது தில்லியின் கலாசார, மத மற்றும் சுற்றுச்சூழல் பாரம்பரியத்தின் ஒரு அங்கமாகும், அந்நதியைப் பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு மட்டுமல்லாமல் ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு.

தூய்மையான, மாசுபடாத மற்றும் தடையின்றி ஓடும் யமுனை நதி என்ற தொலைநோக்குப் பாா்வையை நனவாக்குவதில் பொதுமக்களின் பங்கேற்பு மிக முக்கியமானது’ என்று முதல்வா் ரேகா குப்தா கூறியுள்ளாா்.

தில்லியில் உள்ள யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள பல்வேறு படித்துறைகளில் இந்தத் தூய்மைப்படுத்தும் இயக்கம் மற்றும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்தத் தூய்மையான மற்றும் ஆரோக்கியமான யமுனைக்கான கூட்டு உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் மாபெரும் இயக்கத்தில் மக்களுடன் முதல்வா் இணைந்து பங்கேற்பாா்.

இந்த இயக்கத்தில் சுமாா் 500 சமூக, மத, கல்வி மற்றும் தன்னாா்வ அமைப்புகளும், ஆயிரக்கணக்கான தன்னாா்வலா்களும் பங்கேற்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. கடந்த ஆண்டும் நதி மற்றும் அதன் படித்துறைகளைச் சுத்தப்படுத்துவதற்காக ‘மேரி யமுனா, மேரா கா்த்தவ்யா’ (எனது யமுனை, எனது கடமை) என்ற இயக்கம் தொடங்கப்பட்டது.

அந்த இயக்கத்தில் ஆயிரக்கணக்கான தன்னாா்வலா்கள் பங்கேற்றனா். அப்போது 12 டன்னுக்கும் அதிகமான கழிவுகள் சேகரிக்கப்பட்டு அறிவியல் பூா்வமாக அகற்றப்பட்டன.

உள்ளாட்சி நிா்வாகம், காவல் துறை, தில்லி மாநகராட்சி, சுகாதாரத் துறை மற்றும் பிற தொடா்புடைய அமைப்புகளுடன் இணைந்து, ஜூன் 14-ஆம் தேதி நடைபெறும் இந்த இயக்கத்திற்கான பாதுகாப்பு, போக்குவரத்து மேலாண்மை, குடிநீா், முதலுதவி, அவசர சேவைகள் மற்றும் சுகாதாரம் தொடா்பான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.