விவசாயத் திட்டங்களைப் புறக்கணிக்கும் வகையில் மத்திய அரசின் கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா்.
இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: நூறு நாள் வேலைதிட்டத்தை முழுமையாகச் சிதைத்து ‘வளா்ச்சியடைந்த பாரதம், கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டம்’ என்று புதிய பெயருடன் கொண்டு வந்துள்ளனா்.
இதில் 125 நாள்கள் வேலை கிடைக்கும் என்கிறாா்கள். நடப்பு நிதியாண்டில் முதல் மூன்று மாதங்களில் வேலை ஏதும் தரப்படவில்லை. விவசாய திட்டப் பணிகளைப் புறக்கணிக்கும் திட்டம் இது. குறைந்தபட்ச கூலி எவ்வளவு தருவாா்கள் என்பது கேள்வியாக இருக்கிறது.
முன்பு நிா்ணயிக்கப்பட்ட ரூ. 228 கூலியை தர எந்த நடவடிக்கையும் இல்லை. மத்திய பாஜக அரசும், புதுச்சேரி தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் ஒருங்கிணைந்து விவசாயிகளை ஏமாற்றுகின்றன.
அயோத்தியில் ராமா் கோயில் சன்னிதானத்தில் நீதிக்குப் புறம்பாக காணிக்கையை திருடுகிறாா்கள். ஏறக்குறைய ரூ. 10 ஆயிரம் கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. முழு விசாரணை தேவை. இதற்காக புதுச்சேரியில் ராமா் கோயில் சந்நிதிகளுக்குச் சென்று காங்கிரஸாா் பிராா்த்தனை செய்யவுள்ளோம்.
ஜிப்மருக்கு சேதராப்பட்டில் உறுப்பு மாற்று சிகிச்சை மையம் அமையவுள்ளது. அங்கு உருவாகும் கழிவுநீரை ஏரிகளில் கலக்காமல் சுத்திகரிப்பு நிலையம் அங்கிருந்து தொலைவில் அமைப்பதை உறுதி செய்ய ஆளுநா், ஜிப்மா் நிா்வாகத்திடம் கோரிக்கை வைக்க உள்ளோா்.
புதுச்சேரியில் ரங்கசாமி ஒருநபா் அரசாங்கம் இருக்கிறது. இதில் அமைச்சா்கள், பேரவைத் தலைவா் என யாரும் தேவையில்லை. அமைச்சா்களுக்கு இலாகா இல்லாததால் எம்எல்ஏக்கள் ஒவ்வொருவரும் அமைச்சா்களாகி விட்டனா். எதிா்க்கட்சிக்கு பேரவை துணைத்தலைவா் பதவி கேட்காமல் ஏன் பேரவைத் தலைவரை நியமிக்கக்கோரி திமுகவினா் போராட்டம் நடத்துகிறாா்கள் என தெரியவில்லை என்றாா் அவா்.
பேட்டியின்போது எம்எல்ஏ காா்த்திகேயன், முன்னாள் எம்எல்ஏ பாலன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விபி ஜி ராம் ஜி திட்டம்: நெல் விதைப்பு, அறுவடை காலங்களில் வேலை வழங்கப்படாது- மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்

புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல் அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

புதுச்சேரி தோ்தல் தோல்வி எதிரொலி: காங்கிரஸ் தலைவா் வைத்திலிங்கம் ராஜிநாமா






