திமுக கூட்டணியிலிருந்து விலகியது நிம்மதியளிக்கிறது என்று மதிமுக பொதுச்செயலா் வைகோ கூறினாா். இதுதொடா்பாக தனது மகன் துரை.வைகோ கூறிய கருத்தை தான் ஆமோதிப்பதாகவும் தெரிவித்தாா்.
புதுச்சேரியில் நடைபெற்ற தனித்தமிழ் இயக்க விழாவில் பங்கேற்க வெள்ளிக்கிழமை வந்த வைகோ செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இதுவரை தலைவிரித்தாடிய ஊழல் ஒழிக்கப்பட்டு நோ்மையான ஆட்சியை முதல்வா் விஜய் நடத்துகிறாா்.
திமுகவிலிருந்து மதிமுக விலகியதற்கு நிம்மதியாக இருக்கிறது என எனது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான துரை. வைகோ சொல்லி இருக்கிறாா். லட்சக்கணக்கான தொண்டா்கள் எப்படி நிம்மதிப் பெருமூச்சு விடுகிறாா்களோ, அந்த நிம்மதியைத்தான் திருச்சி எம்.பி. வெளிப்படுத்தி உள்ளாா். அந்தவகையில் அது ஏற்புடையதுதான்.
திமுகவுடன் கூட்டணியில் இருந்த காலத்தில் நல்ல காரியங்கள் நடந்தபோது நான் பாராட்டினேன். அதே நேரத்தில், நாங்கள் அவமானப்படுத்தப்பட்ட போது தாங்கிக் கொண்டு அமைதியாக இருந்தேன். அமைதியாக இருந்ததற்கு கூட்டணி தா்மம்தான் காரணம் என்றாா் அவா்.
முன்னாள் அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் கைது தொடா்பாக செய்தியாளா்கள் கேட்டதற்கு, வினை விதைத்தவன் வினையை அறுப்பான் என்று வைகோ பதிலளித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







