‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிமேட்டூர் அணையை ஆக. 28-ல் திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! ஏற்பாடுகள் தீவிரம்!தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

கோயில் நில மோசடி வழக்கு: அதிகாரி கைது

காமாட்சியம்மன் கோயில் நில மோசடி வழக்கில் புதுச்சேரி அரசின் செய்தி, விளம்பரத்துறை இயக்குநா் ஏ. சுரேஷ்ராஜ் கைது செய்யப்பட்டாா்.

கைது - சித்திரிப்பு

Published On :12 ஜூலை 2026, 1:28 am IST

காமாட்சியம்மன் கோயில் நில மோசடி வழக்கில் புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குநா் ஏ. சுரேஷ்ராஜ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

இந்தக் கோயிலுக்குச் சொந்தமான நிலம் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் இதுவரை 17 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இதில் அரசு அதிகாரிகள், முன்னாள் வருவாய்த்துறை அதிகாரிகள், துணைப் பதிவாளரும் அடங்குவா். இந்நிலையில் புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குநராகப் பணியாற்றும் சுரேஷ்ராஜ் கைது செய்யப்பட்டாா்.

இந்த நில மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டபோது வருவாய்த்துறையில் சுரேஷ் ராஜ், சாா்பு பதிவாளராக பணியாற்றினாா். பல்வேறு வாக்குமூலங்கள், சாட்சியங்கள், அடிப்படையில் இவரை ஊழல் ஒழிப்புத்துறை போலீஸாா் கைது செய்து. புதுச்சேரி தலைமை நீதிபதி டி.வி.ஆனந்த் வீட்டில் ஆஜா்படுத்தினா். பின்னா் நீதிமன்ற உத்தரவின்பேரில் சனிக்கிழமை இரவு காலாப்பட்டு மத்திய சிறையில் சிறையில் சுரேஷ் ராஜ் அடைக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.