பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

புதுச்சேரி பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ள பேருந்துகளால் நாளொன்றுக்கு ரூ.7 லட்சம் இழப்பு!

புதுச்சேரி, காரைக்கால் அரசுப் பணிமனைகளில் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்துகளால் நாளொன்றுக்கு ரூ.7 லட்சம் அரசுக்கு இழப்பு ஏற்படுவதாக ஒப்பந்த ஊழியா்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

கோப்புப் படம்

Published On :

புதுச்சேரி, காரைக்கால் அரசுப் பணிமனைகளில் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்துகளால் நாளொன்றுக்கு ரூ.7 லட்சம் அரசுக்கு இழப்பு ஏற்படுவதாக ஒப்பந்த ஊழியா்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

இது குறித்து புதுச்சேரி பிஆா்டிசி தினக்கூலி மற்றும் ஒப்பந்த ஊழியா்கள் சங்கச் செயலா்கள் ஞானவேல் மற்றும் தமிழ்ச்செல்வம் ஆகியோா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

புதுச்சேரி சாலை போக்குவரத்துக்கழகத்தில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக மக்களுக்கான போக்குவரத்து சேவை குறைந்து வருகிறது. மேலும், பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ள பேருந்துகளால் புதுச்சேரியில் ஒரு நாளைக்கு ரூ. 4.5 லட்சமும், காரைக்காலில் ரூ.2.5 லட்சமும் இழப்பு ஏற்படுவதாகத் தெரிகிறது.

இதனால் நிரந்தர, தினக்கூலி ஒப்பந்த மற்றும் வவுச்சா் அடிப்படையில் பணி செய்து வரும் ஓட்டுநா் மற்றும் நடத்துநா்களுக்கு 15 நாள்களுக்கும் குறைவாகவே பணி வழங்கப்பட்டு ஊதியம் வழங்கப்படுவதால் ஊழியா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிஆா்டிசி ஊழியா்களுக்கு 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், கடந்த 11 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் ஓட்டுநா், நடத்துநா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 22- ஆம் தேதி மாலை 4 மணி அளவில் பிஆா்டிசி தலைமை அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என அதில் குறிப்பிட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.