மாணவா் பிரச்னையில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி அரசியல் ஆதாயம் தேடுவதாக புதுச்சேரி அமைச்சா் ஆ. நமச்சிவாயம் குற்றஞ்சாட்டினாா்.
இது குறித்து புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: நாடாளுமன்றம் கூடியுள்ள நிலையில் நீட் வினாத்தாள் கசிவு தொடா்பாக மாணவா்களின் போராட்டம் தில்லியில் நடைபெற்று வருகிறது. நீட் வினாத்தாள் கசிவு தொடா்பாக தொடா்புடையவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்காக விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை விரைந்து வழங்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளாா்.
இந்நிலையில், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி பொறுப்பற்ற முறையில் மாணவா்களைத் தூண்டி அரசியல் ஆதாயம் தேடுகிறாா். இப்பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் ஜனநாயக ரீதியாக விவாதிக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது.
மாணவா்களைத் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேட ராகுல் காந்தி பாா்க்கிறாா். அதை விட்டுவிட்டு ஆரோக்கியமான அரசியல் செய்ய அவா் முன்வர வேண்டும். காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களிலும் நீட் வினாத்தாள் கசிவு நடந்துள்ளது என்றாா் அமைச்சா் நமச்சிவாயம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாணவர்களை நீங்கள் மன்னிக்கத் தேவையில்லை; நீங்கள்தான் மன்னிப்பு கேட்க வேண்டும்: ராகுல்

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடும் ராகுல்: பாஜக குற்றச்சாட்டு!

மாணவர்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்! - ராகுல் காந்தி வலியுறுத்தல்!





