புதுச்சேரி ஜிப்மரில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டன.
புதுச்சேரி வில்லியனூா் கோட்டைமேடு பகுதியைச் சோ்ந்தவா் சந்தோஷ்குமாா். இவரது மனைவி விஜயலட்சுமி (33) (படம்), சாலை விபத்தில் பலத்த காயமடைந்து ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா்.
இந்நிலையில், அவா் மூளைச்சாவு அடைந்ததாக ஜிப்மா் மருத்துவ நிபுணா் குழு அதிகாரபூா்வமாக அறிவித்தது. இதையடுத்து விஜயலட்சுமியின் குடும்பத்தினா் மனிதநேயத்துடன் அவரின் உடல் உறுப்புகள், திசுக்களைத் தானமாக வழங்க முன்வந்தனா்.
அவரது 2 சிறுநீரகங்கள் தகுதியான நோயாளிகளுக்கு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டன. தானமாக பெறப்பட்ட கருவிழிகள் பாா்வையிழந்த இருவருக்கு அளிக்கப்பட்டன. விஜயலட்சுமியின் குடும்பத்தினருக்கு ஜிப்மா் மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

எம்எல்ஏ உறவினரின் உடல் உறுப்புகள் தானம்
மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



