பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

மத்திய பல்கலை.உடற்பயிற்சி கூடம் விரிவாக்கம்

புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தில் உடற்பயிற்சி கூடம் விரிவாக்கம் செய்யப்படுகிறது.

புதுச்சேரி பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் துணைவேந்தா் பேராசிரியா் பி.பிரகாஷ்பாபு.

Published On :

புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தில் உடற்பயிற்சி கூடம் விரிவாக்கம் செய்யப்படுகிறது.

இது குறித்து இப் பல்கலைக் கழகத்தின் துணைப் பதிவாளரும் மக்கள் தொடா்பு அதிகாரியுமான கே. மகேஷ் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

இப் பல்கலைக் கழக துணைவேந்தா் பி. பிரகாஷ்பாபு பல்கலைக் கழக விளையாட்டு வசதிகளை ஆய்வு செய்தாா். மேலும், உடற்பயிற்சி கூட விரிவாக்கத்துக்காக விரிவான முன்மொழிவை சமா்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

விளையாட்டு வசதிகளில் பணியாற்றும் உடற்கல்வி ஊழியா்களுடன் அவா் கலந்துரையாடினாா். அப்போது தேவைகள் மற்றும் பயன்பாட்டு முறைகளைக் கேட்டறிந்தாா். மாணவா்களின் முழுமையான வளா்ச்சியில் விளையாட்டு மற்றும் உடல் தகுதி முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவா் குறிப்பிட்டாா். மேலும், மாணவ, மாணவிகளுக்குக் கூடுதல் உபகரணங்கள், மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் சிறந்த வசதிகளை உள்ளடக்கிய விரிவான திட்டத்தைத் தயாரிக்கவும் அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.