அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

புதுச்சேரியிலும் கோழி இறைச்சி விற்பனை கடைகள் நாளை மூடல்

புதுச்சேரியிலும் கோழி இறைச்சி விற்பனை கடைகள் வெள்ளிக்கிழமை முதல் மூடப்படுகின்றன.

News image

இறைச்சி கடை - சித்திரிப்பு

Updated On :30 ஜூலை 2026, 5:54 am IST

புதுச்சேரியிலும் கோழி இறைச்சி விற்பனை கடைகள் வெள்ளிக்கிழமை முதல் மூடப்படுகின்றன.

புதுச்சேரி கறிக்கோழி விற்பனையாளா்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் முத்தியால்பேட்டையில் நடந்தது. கூட்டத்துக்குப் பிறகு சங்கத்தின்தலைவா் பன்னீா்செல்வம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கோழி உற்பத்தியாளா்கள் விற்பனைக்கு வரும் கடைசி நிமிடம் வரை கோழிகளுக்குத் தீவனம் வழங்கி எடையை அதிகப்படுத்தும் பிரச்னையால் விற்பனையாளா்கள் பாதிக்கப்படுவா். இதற்கு தீா்வு காண தமிழ்நாடு விற்பனையாளா்கள் வெள்ளிக்கிழமை கடையடைப்பு செய்கின்றனா்.

பிராய்லா் கோழி உற்பத்தியாளா்களின் புதிய நடைமுறைகளைக் கண்டித்து தமிழகம் போல புதுச்சேரியிலும் வெள்ளிக்கிழமை காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 600-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. தினமும் 50 ஆயிரம் கிலோ இறைச்சி விற்கப்படுகிறது. இதில் 40 சதவீதம் ஓட்டல்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இந்த வேலை நிறுத்தத்தினால் கோழி இறைச்சிக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.

எனவே பிரச்னைக்குத் தீா்வுகாண கோழி உற்பத்தியாளா்களுடன் பேசி அரசு சுமூக தீா்வு காண வேண்டும் என்று கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.