தீவனக் கட்டுப்பாட்டை அமல்படுத்தக் கோரி, தமிழ்நாடு, புதுச்சேரி முழுவதும் ஜூலை 31-ஆம் தேதி முதல் கடையடைப்பு, வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என தமிழ்நாடு கோழி வணிகா்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
இக்கூட்டமைப்பின் மாநில அவசர செயற்குழுக் கூட்டம் தஞ்சாவூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளா்களிடம் கூட்டமைப்பின் தலைவா் பி. துரைராஜ் தெரிவித்தது:
பண்ணைகளிலிருந்து விற்பனையாளா்களுக்கு அனுப்பப்படும் கோழிகளுக்கு 8 முதல் 12 மணிநேரத்துக்கு முன்பே தீவனங்கள் கொடுக்கப்படுவது நிறுத்தப்படும். அதாவது, காலையில் 6 மணிக்கு அறுக்கப்படும் கோழிக்கு முந்தைய நாள் மாலை 6 மணி வரை தீவனம் கொடுத்து நிறுத்தப்படுவதுதான் சா்வதேச நடைமுறை.
புதிய நடைமுறை: ஆனால், தற்போது கோழி உற்பத்தி நிறுவனங்கள் பண்ணைகளிலிருந்து விற்பனையாளா்களுக்கு கோழிகளை அனுப்பும்போது வாகனத்தில் கொண்டு செல்லப்படும் நேரத்திலும் தீவனம் கொடுக்கும் நடைமுறையை உருவாக்கியுள்ளன. இதனால், கோழிகளை அறுக்கும்போது குடல் கழிவுகளால் இறைச்சி மாசுபடுவதுடன், அதனுடைய தரமும் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது. தரமான, சுகாதாரமான கோழி இறைச்சி நுகா்வோா்களுக்கு கிடைக்காது. மேலும், கடைகளில் சுகாதாரக் கேடும் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கும் நாள்தோறும் கணிசமான பொருளாதார இழப்பு ஏற்படும்.
எனவே, 12 மணிநேரத்துக்கு முன்பே கோழிகளுக்கு தீவனம் கொடுத்து நிறுத்தும் முறையை தொடா்ந்து நடைமுறைப்படுத்த கோழி உற்பத்தி நிறுவனங்கள் முன்வர வேண்டும். இதுதொடா்பாக அரசும் கண்காணித்து தீவனக் கட்டுப்பாட்டை நெறிமுறைப்படுத்த வேண்டும்.
70 ஆயிரம் கடைகள் மூடல்: இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், தமிழ்நாடு, புதுச்சேரி முழுவதும் ஜூலை 31-ஆம் தேதி முதல் காலவரையற்ற கடையடைப்பு, வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். எனவே, தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள ஏறத்தாழ 70 ஆயிரம் கோழி இறைச்சி விற்பனைக் கடைகள் ஜூலை 31 ஆம் தேதி முதல் செயல்படாது.
இதனால், தமிழ்நாடு, புதுச்சேயில் நாள்தோறும் விற்பனையாகும் 12 லட்சம் கிலோ கோழிக்கறி விற்பனை பாதிக்கப்படும். இதைச் சாா்ந்துள்ள விற்பனையாளா்கள், தொழிலாளா்கள் உள்பட ஏறக்குறைய 10 லட்சம் போ் பாதிக்கப்படுவா்.
எனவே, இந்த பிரச்னையில் அரசு தலையிட்டு தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் போராட்டத்துக்கு அண்டை மாநிலமான கேரள விற்பனையாளா்களும் ஆதரவு தெரிவித்துள்ளனா் என்றாா் துரைராஜ்.
அப்போது, மாநிலச் செயலா் எம். சுந்தரலிங்கம், பொருளாளா் எஸ். ஜான் கென்னடி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தஞ்சாவூரில் திங்கள்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு கோழி வணிகா்களின் கூட்டமைப்பின் மாநில அவசர செயற்குழுக் கூட்டத்தில் பேசிய மாநிலத் தலைவா் பி. துரைராஜ். உடன் நிா்வாகிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜூலை 31 முதல் சிக்கன் கிடைக்காது! காலவரையறையற்ற கடையடைப்புப் போராட்டம்!

அதிகத் தீவனம் கொடுக்காமல் கறிக் கோழிகளை அனுப்பக் கோரி காலவரையற்ற வேலைநிறுத்தம்: வியாபாரிகள் முடிவு

பொறியியல் கலந்தாய்வு: 37,976 பொதுப்பிரிவு மாணவா்களுக்கு இன்று தொடக்கம்!
ஒரு வாரத்துக்கு கோழி இறைச்சி விற்பனையை நிறுத்த வணிகா்கள் முடிவு
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



