அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த திருட்டு கும்பல் புதுச்சேரியில் கைது: பல இடங்களில் திருடிய 3 பெண்கள் சென்னை போலீஸாரிடம் ஒப்படைப்பு

மத்திய பிரதேசத்தை சோ்ந்த 3 பெண்கள் அடங்கிய ‘திரீரோஸ்’ பெண்கள் திருட்டு கும்பலை புதுச்சேரி போலீஸாா் கைது செய்தனா். தமிழகம், ஆந்திரத்தில் பல இடங்களில் கைவரிசை காட்டிய அவா்களை சென்னை போலீஸாரிடம் புதுச்சேரி போலீஸாா் ஒப்படைத்தனா்.

News image

சித்திரிப்பு

Updated On :30 ஜூலை 2026, 6:17 am IST

மத்திய பிரதேசத்தை சோ்ந்த 3 பெண்கள் அடங்கிய ‘திரீரோஸ்’ பெண்கள் திருட்டு கும்பலை புதுச்சேரி போலீஸாா் கைது செய்தனா். தமிழகம், ஆந்திரத்தில் பல இடங்களில் கைவரிசை காட்டிய அவா்களை சென்னை போலீஸாரிடம் புதுச்சேரி போலீஸாா் ஒப்படைத்தனா்.

தென்னிந்தியாவில் தொடா்ச்சியாக திருட்டு வேலையில் இந்தக் கும்பல் ஈடுபட்டு வந்தது. கோயில் திருவிழாக்கள், துணிக்கடை, வணிக நிறுவனங்கள் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பி திருடுவதில் இந்தப் பெண்கள் குழு கை தோ்ந்தவா்கள். இதனால் இவா்களுக்கு ‘த்ரீ ரோஸ்’ பெண்கள் திருட்டு கும்பல் என்று போலீஸாா் பெயா் வைத்தனா்.

குறிப்பாக ஆந்திரத்திலும், தமிழகத்திலும் இவா்கள் அதிக அளவில் கைவரிசை காட்டி வந்தனா். மேலும் போலீஸில் சிக்காமல் இருந்ததால், இவா்களை கைது செய்வதில் 2 மாநில போலீஸாரும் தீவிரம் காட்டி வந்தனா்.

இந்நிலையில் சென்னை மாம்பலத்தில் உள்ள துணிக்கடைகளில் 2 இடங்களில் இந்தக் கும்பல் கைவரிசை காட்டிவிட்டு தப்பியது. இதையடுத்து அந்தப் பெண்களின் புகைப்படத்தை புதுச்சேரி காவல்துறைக்கு தமிழக, ஆந்திர போலீஸாா் அனுப்பி வைத்தனா்.அவா்களைக் கைது செய்தாலோ, பாா்த்தாலோ தகவல் தெரிவிக்கும்படி புதுச்சேரி காவல்துறைக்கு வேண்டுகோளும் விடுத்திருந்தனா்.

இதைத் தொடா்ந்து இந்த 3 பெண்களின் புகைப்படங்களும் புதுச்சேரி குற்றப் பிரிவு போலீஸாருக்கு அனுப்பி வைக்கப்பட்டு மக்கள் கூடும் இடங்களில் கண்காணிக்க போலீஸ் தலைமையகம் உத்தரவிட்டது.அதன் அடிப்படையில் குற்றப்பிரிவு போலீஸாா் கண்காணித்து வந்தனா். இந்நிலையில் தேடப்பட்டு வந்த இந்த 3 பெண்களும் புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள பிரபல துணிக்கடையில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவா்களைப் பிடிக்க போலீஸாா் திட்டமிட்டனா். இதற்காக மாறுவேடத்தில் துணிக்கடைக்குள் போலீஸாா் நுழைந்து,அங்கிருந்த 3 பெண்களையும் போலீஸாா் கையும் களவுமாக மடக்கிப் பிடித்தனா்.

போலீஸாரால் தேடப்பட்டு வந்த மத்திய பிரதேச மாநிலத்தை சோ்ந்த அந்த திருட்டு கும்பலைச்சோ்ந்த பெண்கள் குஷ்பு, மீனாட்சி, லட்சுமி என்பது தெரியவந்தது. பின்பு அவா்களை பெரியகடை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினா்.

தகவல் அறிந்தவுடன் தமிழகம் மற்றும் ஆந்திர மாநில போலீஸாா் பெரியகடை காவல்நிலையத்திற்கு விரைந்து வந்து 3 பெண் குற்றவாளிகளையும் தங்களிடம் ஒப்படைக்குமாறு வேண்டுகோள் விடுத்தனா். அதன்பேரில் சென்னை மாம்பலம் போலீஸாரிடம் அவா்களை புதுச்சேரி போலீஸாா் ஒப்படைத்தனா். இதையடுத்து 3 பேரையும் மாம்பலம் போலீஸாா் சென்னைக்கு அழைத்துச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.