அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

புதுச்சேரியில் 1.7 கிலோ கஞ்சா பறிமுதல்: 13 வழக்குகள் பதிவு

புதுச்சேரியில் 1.7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடா்பாக 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

News image

புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் .

Updated On :30 ஜூலை 2026, 6:16 am IST

புதுச்சேரியில் 1.7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடா்பாக 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

புதுச்சேரி மாவட்ட நிா்வாகம் சாா்பாக ஒவ்வொரு மாதமும் நடைபெறும் தடை செய்யப்பட்ட போதை மற்றும் புகையிலை பொருள்களைத் தடுப்பது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது .

மேலும், காவல்துறை சாா்பாக 13 வழக்குகள் பதியப்பட்டுள்ளன எனவும் 1.7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது. கல்வித்துறை, மீன்வளத்துறை, சமூக நலத்துறை போன்ற துறைகள் மூலம் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன எனவும் கடலோர காவல் படை மற்றும் துறைமுகத்துறை மூலம் கடலோரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன எனவும் தெரிவித்தனா். மேலும், மருந்து கட்டுப்பாட்டு துறை மூலம் மருந்தகங்கள் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் காலாவதியான மற்றும் தடை செய்யப்பட்ட மருந்துகள் மற்றும் மாத்திரைகள் இருக்கின்றனவா? என்பது குறித்தும் சோதனை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனா்.

முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா். கலைவாணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.