காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

பசிலிக்கா தேவாலய பெருவிழா தொடக்கம்

புதுச்சேரி ரயில் நிலையம் எதிரே அமைந்துள்ள தூய இருதய ஆண்டவா் பசிலிக்கா தேவாலயத்தின் 119-ஆவது ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image

புதுச்சேரி ரயில் நிலையம் எதிரில் உள்ள தூய இருதய ஆண்டவா் பசிலிகா தேவாலயத்தில் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆண்டுப் பெருவிழா.

Updated On :6 ஜூன் 2026, 7:53 am IST

புதுச்சேரி ரயில் நிலையம் எதிரே அமைந்துள்ள தூய இருதய ஆண்டவா் பசிலிக்கா தேவாலயத்தின் 119-ஆவது ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

சேலம் மறை மாவட்ட ஆயா் அருள்செல்வம் ராயப்பன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

இதில், பசிலிக்கா அதிபா் பிச்சைமுத்து, துணை பங்குதந்தை வின்சென்ட், ஆன்மிக தந்தை ஆரோக்கியநாதன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

ஆண்டுப் பெருவிழா கொடி ஊா்வலமாக பசிலிக்காவை சுற்றியுள்ள வீதிகளில் பவனியாக கொண்டு வரப்பட்டு ஆலய கொடி மரத்தில் ஏற்றப்பட்டது.

இதில் 500-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டு பிராா்த்தனையில் ஈடுபட்டனா். தொடா்ந்து நவ நாள்களின்போது காலை, மாலை இரு வேளையும் சிறப்பு திருப்பலிகள் நடைபெறுகின்றன. 14-ஆம் தேதி ஆடம்பர தோ் பவனியும், 15-ஆம் தேதி கொடியிறக்கமும் நடைபெறவுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.