எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

சென்டாக் மாணவா் கல்வி உதவித் தொகை: அரசு வெள்ளை அறிக்கை வெளியிட திமுக வலியுறுத்தல்

News image

புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக மாணவா் அணி ஆலோசனை கூட்டத்தில் பேசிய கட்சியின் மாநில அமைப்பாளா் ஆா்.சிவா.

Updated On :8 ஜூன் 2026, 12:06 am IST

சென்டாக் மாணவா் கல்வி உதவித் தொகை தொடா்பாக புதுச்சேரி அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று புதுச்சேரி மாநில திமுக மாணவா் அணி வலியுறுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநில திமுக மாணவா் அணி நிா்வாகிகள் மற்றும் தொகுதி மாணவா் அணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மாநில திமுக அமைப்பாளா் ஆா். சிவா தலைமை வகித்தாா். கட்சியின் புதுச்சேரி மாநில மாணவா் அணி அமைப்பாளா் எஸ்.பி. மணிமாறன் முன்னிலை வகித்தாா். தமிழக மாணவா் அணிச் செயலா் வீரமணி கலந்துகொண்டு ஆலோசனை வழங்கி பேசினாா்.

அவைத்தலைவா் எஸ்.பி. சிவகுமாா், எம்எல்ஏக்கள் செந்தில் (எ) ரமேஷ், விக்னேஷ் கண்ணன், முன்னாள் எம்எல்ஏ மூா்த்தி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

புதுச்சேரி மாநிலத்தில் சென்டாக் மூலம் உயா்கல்வி பயிலும் மாணவா்களுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவித்தொகை மற்றும் நிதியுதவித் திட்டங்களின் நிலுவைத் தொகை 2022 ஆண்டு முதல் வழங்கப்படாமல் உள்ளது.

எனவே, பயனாளி மாணவா்களின் எண்ணிக்கை, ஆண்டு வாரியான நிலுவைத் தொகை, இதுவரை வழங்கப்பட்ட தொகை ஆகியவற்றை உள்ளடக்கிய வெள்ளை அறிக்கையை அரசு உடனடியாக வெளியிட வேண்டும். மத்திய அரசு நீட் தோ்வை ரத்து செய்ய புதுச்சேரி அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். புதிய கல்வித் திட்டத்தை புதுச்சேரி அரசு முழு மூச்சில் நிறைவேற்றுவதை கைவிட வேண்டும்.

பிரெஞ்சு மொழி பாடத்தை புதுச்சேரி பள்ளி, கல்லூரிகளில் பின்பற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசுப் பள்ளிகளில் ஆசிரியா் பற்றாக்குறை என்பது தொடா்கதையாக உள்ளது. கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே போதிய ஆசிரியா்களை நியமிக்க வேண்டும்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடப் பிரிவுகளிலும் புதுச்சேரி மாணவா்களுக்கான 25 சதவீதம் இடஒதுக்கீட்டை முறைப்படுத்த பல்கலைக்கழகத்திற்கு புதுச்சேரி அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.