புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கத்தில் 3 புதிய அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளனர்.
30 உறுப்பினா்களைக் கொண்ட புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைக்கு, கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது. இதில் என். ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி 18 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொண்டது.
ஆட்சியமைக்க 16 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில் என்.ஆா்.காங்கிரஸ் 12, பாஜக 4, அதிமுக, லஜக 1 தலா ஒரு தொகுதிகள் என 18 இடங்களில் வெற்றி பெற்றன.
அமைச்சரவைப் பதவிகள் பங்கீடு தொடர்பாக பாஜக மற்றும் என்.ஆர். காங்கிரஸ் இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. 2 அமைச்சர்கள் மற்றும் பேரவைத் தலைவர் பதவி வழங்க பாஜக கோரிக்கை வைத்திருந்த நிலையில் ரங்கசாமி மறுத்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர் மே 13 அன்று ரங்கசாமி முதல்வராகப் பதவியேற்றார். அவருடன் நமச்சியாவம் (பாஜக) , மல்லாடி கிருஷ்ணராவ் (என்.ஆர். காங்கிரஸ்) ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். இதனைத் தொடர்ந்து, ஜூன் 3 அன்று அமைச்சரவை விரிவாக்கத்திற்காக ஆளுநர் கைலாஷ்நாதனைச் சந்தித்து ரங்கசாமி கடிதம் வழங்கியிருந்தார்.
இந்த நிலையில், மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததைத் தொடர்ந்து 3 புதிய அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளனர். ராஜவேலு (என்.ஆர். காங்கிரஸ்), சிவக்கொழுந்து (என்.ஆர். காங்கிரஸ்), ராஜசேகரன் (பாஜக) ஆகியோர் அமைச்சர்களாகின்றனர். புதிய அமைச்சர்கள் 3 பேரும் ஜூன் 17 அன்று பதவியேற்கின்றனர்.
Summary
Three new ministers in the Puducherry cabinet
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரா்கள் மருத்துவ செலவைத் திரும்பப் பெற புதிய திட்டம்: புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி ஆலோசனை

புதுவை அமைச்சரவை விரிவாக்கம் தாமதம் ஏன்? அதிகாரத்துக்காக போட்டி!

அமைச்சரவை விரிவாக்கத்தில் முதல்வர் விஜய்க்கு கூடுதல் துறைகள்!
தமிழ்நாட்டில் மேலும் 23 அமைச்சர்கள் பதவியேற்பு! நேரலை
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP




