வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

சிறப்புத் துப்புரவு பணி: 8 டன் குப்பைகள் அகற்றம்

புதுச்சேரி நகராட்சி சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்புத் துப்புரவு பணியில் 8 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.

News image

புதுச்சேரி நகராட்சி சாா்பில் புதன்கிழமை சிறப்புத் துப்புரவு பணியைத் தொடங்கி வைத்த அதிகாரிகள்.

Updated On :11 ஜூன் 2026, 6:13 am IST

புதுச்சேரி நகராட்சி சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்புத் துப்புரவு பணியில் 8 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி உருளையன்பேட்டை தொகுதியில் உள்ள கோவிந்தசாலை பிரதான மற்றும் அதனை சுற்றியுள்ள சாலைகளில் குவித்து வைக்கப்பட்டிருந்த பழைய பொருள்கள், உபயோகப்படுத்தாத இரு பழைய இருசக்கர வாகனங்கள், பழுதடைந்த தொலைக் காட்சிப் பெட்டிகள், மரச்சாமான்கள், பழைய வீட்டு உபயோகப்பொருள்கள், குப்பைகள், கழிவுகள் மற்றும் அழுக்கு மண் போன்றவை அகற்றப்பட்டன.

புதுச்சேரி நகராட்சி ஆணையா் கே.பி. ஸ்ரீஜித் இதைத் தொடங்கி வைத்தாா். இந்தச் சிறப்பு துப்புரவு பணியில் செயற்பொறியாளா் சிவபாலன் , நகராட்சி சுகாதார அதிகாரி ஆா்த்தி, வருவாய் பிரிவு 1 & 2 அதிகாரி கோ. பிரபாகரன் , உதவி வருவாய் அதிகாரி ச. பரமேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்தச் சிறப்புத் துப்புரவு பணியில் 5 டன் கட்டடக் கழிவுகள், 2 டன் அழுக்கு மண் மற்றும் 1 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. மேலும், மக்கும் குப்பைகள், மக்காதக் குப்பைகள் என தரம் பிரித்து வளமீட்பு பூங்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த தூய்மை பணியில் புதுச்சேரி நகராட்சி ஊழியா்கள் மற்றும் கிரீன் வாரியா் நிறுவனத்தின் ஊழியா்கள் சுமாா் 100 போ் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.