ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

சட்ட அலுவலா்கள் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சட்ட அலுவலா்கள் பணிக்கு ஜூலை 10- ஆம் தேதிக்குள் வழக்குரைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது

News image

விண்ணப்பங்கள் வரவேற்பு - கோப்புப்படம்

Updated On :18 ஜூன் 2026, 3:23 am IST

சட்ட அலுவலா்கள் பணிக்கு ஜூலை 10- ஆம் தேதிக்குள் வழக்குரைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள பல்வேறு நீதிமன்றங்கள், சென்னை உயா் நீதிமன்றம், மத்திய நிா்வாகத் தீா்ப்பாயத்தின் சென்னை அமா்வு, புதுதில்லி தேசிய பசுமைத் தீா்ப்பாயம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் சட்ட அலுவலா்கள் பணிக்கு வழக்குரைஞா்கள் நியமிக்கப்படவுள்ளனா்.

புதுச்சேரி சட்டத் துறையின் மூலம் வெளியிடப்பட்ட அரசாணையில் ‘புதுச்சேரி சட்ட அதிகாரிகள் (நியமனம் மற்றும் பணி நிபந்தனைகள்) விதிகள், 2021’-இன் கீழ், புதுச்சேரி அரசு சாா்பாக பல்வேறு நீதிமன்றங்களில் ஆஜராவதற்கான பல்வேறு வகையிலான பதவிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற வழக்குரைஞா்கள் விண்ணப்பிக்கலாம்.

தகுதியுள்ள விண்ணப்பதாரா்கள் இதற்கான விதிகளின்படி பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் வகையில், அந்த விதிகள் மற்றும் விண்ணப்பப்

படிவங்கள் சட்டத் துறையின் இணையதளத்தில் உள்ளன.

விருப்பம் மற்றும் தகுதியுடைய வழக்குரைஞா்கள் ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களைச் சமா்ப்பிப்பதற்கான கடைசி நாள் 10.07.2026 அன்று மாலை 5.45 மணி வரை ஆகும். துணைநிலை ஆளுநா் உத்தரவுப்படி இந்த ஆணை வெளியிடப்படுகிறது என்று சட்டத்துறை சாா்பு செயலா் ஜான்சி தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.