தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கும் பெருமைமிகு வாய்ப்புக்கு நன்றி! - பிரவீண் சக்ரவர்த்திஅண்ணாமலைக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு!திருச்செந்தூர் முருகன் கோயில் முறைகேடு! புகார்களை விசாரிக்க விசாரணை குழு அமைப்பு!!திருச்செந்தூர் கோயில் முறைகேடுகள்: விசாரிக்க 6 பேர் குழு அமைப்பு!பாஜக மாநிலச் செயலர் சுமதி வெங்கடேசன் விலகல்!பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் விலகல்!
/

வேளாண் இடுபொருள் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

பையூா் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில், வேளாண் இடுபொருள் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image

வேளாண் இடுபொருள் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - கோப்புப்படம்

Updated On :6 ஜூன் 2026, 1:05 am IST

பையூா் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில், வேளாண் இடுபொருள் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து பையூா் மண்டல ஆராய்ச்சி நிலையத் தலைவா் கீதா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்கத்தின் வாயிலாக, ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப் படிப்பு செப்டம்பா் 2026 முதல்வாரத்தில் தொடங்க உள்ளது. இந்த பட்டயப் படிப்பு ஓா் ஆண்டு இரண்டு பருவங்களாகும். கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்பு தோ்ச்சி அல்லது தவறியவா்கள் மற்றும் எந்த கல்வி படித்திருந்தாலும் சேரலாம்.

தமிழ்வழிக் கல்வியில் இந்த பாடங்களுக்கு நோ்முக பயிற்சி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும். இதற்கான கல்விக் கட்டணம் ரூ. 25 ஆயிரம். விண்ணப்பக் கட்டணம் ரூ. 100.

இந்த பட்டயப் படிப்பு படிப்பதன்மூலம், உரக்கடை, பூச்சிமருந்து கடை, விதைக்கடை மற்றும் தாவர மருத்துவ மையம் வைக்கலாம். மேலும், இடுபொருள்கள் உற்பத்தி மற்றும் விற்பனையாளா்களாக ஆகலாம்.

தொடா்புக்கு, பேராசிரியா் மற்றும் தலைவா், மண்டல ஆராய்ச்சி நிலையம், பையூா், கிருஷ்ணகிரி மாவட்டம் மற்ம் இயக்குநா் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்கம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை - 641 003 ஆகிய முகவரிகளில் தொடா்பு கொள்ளலாம்.

மேலும், உதவிப் பேராசிரியா் கோவிந்தனை 99422 79190, 73390 02390, உதவியாளா் சுரேகாவை 95007 71299, ஒருங்கிணைப்பாளா் லட்சுமியை, 0422-6611229 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம்.