புணேயில் உள்ள உயர் ஆற்றல் பொருள்கள் ஆராய்ச்சி ஆய்வகத்தில்(எச்இஎம்ஆர்எல்) பொறியியல் பட்டதாரிகளுக்கு அளிக்கப்படும் ஊதியத்துடன் கூடிய பயிற்சிக்கு பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
புணேயில் இந்திய ராணுவத்தின் கீழ் செயல்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கு(டிஆர்டிஓ) சொந்தமான உயர் ஆற்றல் பொருள்ட்கள் ஆராய்ச்சி ஆய்வகம்(எச்இஎம்ஆர்எல்) செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனம் உந்துபொருள்கள், வீரியமிக்க வெடிபொருள்கள், பைரோடெக்னிக்ஸ், பாலிமர் பொருள்கள், லைனர்கள், இன்சுலேட்டர்கள் மற்றும் பிற பொருள்களின் உருவாக்கம், வடிவமைப்பு மற்றும் மேம்பாடு ஆகியவற்றில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்கிறது. மேலும், பொருள்களின் இயற்பியல்-வேதியியல் மற்றும் எரிதல் பண்புகள் குறித்த ஆய்வுகள், வெடிப்பு நிகழ்வுகள் குறித்த ஆய்வுகள் மற்றும் புதிய அமைப்புகளின் உருவாக்கம் குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது.
இந்த நிறுவனத்தில் தற்போது, பொறியியல் பட்டதாரிகளுக்கு அளிக்கப்படும் ஊதியத்துடன் கூடிய பயிற்சிக்கு சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ, பி.டெக் படிக்கும் இறுதியாண்டு மாணவர்கள் அல்லது இயற்பியல், வேதியியல் பிரிவில் முதுகலை இறுதியாண்டு மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுபற்றிய விபரம் வருமாறு:
அறிவிப்பு எண்.: HEMRL/HRD/PDINTERN/2026-27
பயிற்சியின் பெயர்: Paid Internship
காலியிடங்கள்: 40
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Aerospace Engineering - 2
2. Chemical Engineering - 10
3. Mechanical Engineering - 10
4. Chemistry - 10
5. Physics - 2
6. Electrical Engineering - 2
7. Electronics and Communication Engineering - 2
8. Computer Engineering - 2
உதவித்தொகை: மாதம் ரூ.5000
தகுதி: சம்மந்தப்பட்ட பொறியியல் பாடப்பிரிவுகளில் பிஇ, பி.டெக் இறுதியாண்டு படிக்கும் மாணவராக இருக்க வேண்டும் அல்லது இயற்பியல், வேதியியல் பாடப்பிரிவுகளில் முதுகலை இறுதி ஆண்டு படிக்கும் மாணவராக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். இதுகுறித்த தகவல் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். பயிற்சிப் பணி(Intrnship) ஆகஸ்ட் மாதம் 1-ஆம் தேதி தொடங்கும். பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுபவர்களின் விவரம் 15.7.2026 அன்று வெளியிடப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.drdo.gov.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Director (HEMRL), Sytarwadi, Pune,ΡΙΝ: 411 021.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 3.7.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
Summary
Application are invited from eligible final year students pursuing under-graduation, postgraduation in engineering/science in the prescribed format for the following disciplines
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டிஆர்டிஓ-ல் ஊதியத்துடன் கூடிய பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்தில் ஊதியத்துடன் கூடிய பயிற்சி!

மத்திய அரசின் சி-டாக் நிறுவனத்தில் வேலை: பி.இ, எம்.எஸ்சி முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

வேளாண் இடுபொருள் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI




