தமிழ்நாடுவேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பட்டயப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு புதன்கிழமை (ஜூலை 15) இறுதிநாள் நேரடி கலந்தாய்வு நடைபெறுகிறது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல் ஆகிய பிரிவுகளில் பட்டயப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்தப் படிப்புகளுக்கு அரசுக் கல்லூரிகளில் 600 இடங்களும், தனியாா் இணைப்புக் கல்லூரிகளில் 640 இடங்களும் உள்ளன.
இந்த பட்டயப் படிப்புகளின் சோ்க்கைக்கான நேரடி கலந்தாய்வு ஜூலை 14, 15 ஆம் தேதிகளில் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் நாள் கலந்தாய்வில் பங்கேற்காத மாணவா்கள் இரண்டாம் நாள் கலந்தாய்வில் பங்கேற்கலாம். கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட மாணவா்களின் விவரங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதன் மூலம் தங்களுக்கான கலந்தாய்வு நேரத்தை மாணவா்கள் அறிந்துகொள்ளலாம்.
மேலும் இது தொடா்பான விவரங்களுக்கு 94886 35077, 94864 25076 என்ற எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்று மாணவா் சோ்க்கைக் குழு தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










