லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

அயோத்தி ராமர் கோயிலுக்கு சிஇஓ தேர்வு: ஜூலை 18 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு!

அயோத்தி ராமர் கோயிலுக்கு சிஇஓ தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு பற்றி..

News image

அயோத்தி ராமர் கோயில் - கோப்புப்படம்

Updated On :13 ஜூலை 2026, 4:48 pm IST

அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கான தலைமை நிர்வாக அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க ஜூலை 18 கடைசி நாளாகும் என ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்திர அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

அயோத்தி கோயில் நிதி மற்றும் பிற மதிப்புமிக்க பொருள்கள் கையாடல் செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அயோத்தி ராமர் கோயிலில் தலைமை நிர்வாக அதிகாரி பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க ஜூலை 18 மாலை 4 மணி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என ராமர் அறக்கட்டளை வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளது.

ராமர் கோயில் கட்டுமான குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா செய்தியாளர்களிடம் கூறுகையில்,

அறக்கட்டளையின் மீது பக்தர்களுக்கு நம்பிக்கையைக் காப்பதே தலைமை நிர்வாக அதிகாரியின் முதன்மையான பொறுப்பாக இருக்கும்.

விண்ணப்பங்களை ஆய்வு செய்து, அப்பதவிக்கு ஏற்ற வேட்பாளர்களைப் பரிந்துரைப்பதற்காக, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பிரமோத் கோஹ்லி, லெப்டினன்ட் ஜெனரல் விஷ்ணுகாந்த் சதுர்வேதி, என்ஐடி ராய்ப்பூரின் முன்னாள் தலைவர் சுரேஷ் ஹவாரே ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட குழுவை இந்த மாத தொடக்கத்தில் அறக்கட்டளை அமைத்தது.

தாங்கள் அந்தக் குழுவில் இடம்பெறப்போவதில்லை என்றும், ஜூலை 22 அன்று நடைபெறவுள்ள அறக்கட்டளைக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலைத் தெரிந்துகொண்ட பிறகு அதில் கலந்துகொள்வது குறித்து முடிவெடுக்கப்படும்.

கோயில் கட்டுமானப் பணிகளுடன் தொடர்புடைய குழு உறுப்பினர்கள் 'பதவிவழி' உறுப்பினர்களாகவே இருந்தனர் என்றும், அறக்கட்டளையில் அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.