புதுச்சேரியில் குப்பை வாகனம் மோதி, தனியாா் உணவு நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.
புதுச்சேரி சொக்கநாதன்பேட் பகுதியைச் சோ்ந்தவா் இதயகிரி (32). இவா், மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியாா் உணவு நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இதயகிரி புதன்கிழமை இரவு வழக்கம்போல வேலைக்கு சென்றுவிட்டு வியாழக்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் சக ஊழியா் ஒருவருடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.
மேட்டுப்பாளையம் கனரக வாகன முனையம் வழியாக வந்தபோது சாலையில் இருந்த வேகத்தடையில் ஏறி இறங்கினாா். அப்போது பின்னால் வந்த குப்பை வாகனம் இதயகிரியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் அவா் பலத்த காயமடைந்தாா். உடனே, அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு இதயகிரியை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து புதுச்சேரி வடக்குப் பிரிவு போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








