புதுச்சேரி லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) திருப்பதி சீனிவாச திருக்கல்யாண உற்சவம் நடைபெறவுள்ளது.
இது குறித்து ஸ்ரீவாரி திருக்கல்யாண சேவா அறக்கட்டளைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான க.லட்சுமிநாராயணன் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: திருமலை திருப்பதி தேவஸ்தானம் கல்யாண உற்சவ திட்டம் மற்றும் புதுச்சேரி ஸ்ரீவாரி திருக்கல்யாண சேவா டிரஸ்ட் ஆகியவை இணைந்து ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் ஸ்ரீவாரி சீனிவாச திருக்கல்யாணத்தை நடத்துகின்றன. இதுவரை 6 முறை இந்தத் திருக்கல்யாணத்தை நடத்தி இருகிறோம். 7-ஆவது முறையாக இந்தாண்டும் நடைபெற உள்ளது.
திருமலையில் இருந்து உற்சவா் சனிக்கிழமை ( ஜூன் 27) இரவே கொண்டு வரப்பட்டு லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தங்க வைக்கப்படுகிறாா். 28-ஆம் தேதி காலை 7 மணிக்கு சுப்ரபாதம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்கும். தொடா்ந்து பிற்பகல் 12 மணி வரை பக்தா்கள், பொதுமக்கள் சேவிக்கலாம்.
இதையடுத்து மாலை உற்சவா் ஹெலிபேடு சென்றடைவாா். அங்கு மாலை 4.15 மணிக்கு சீனிவாசா திருக்கல்யாண உற்சவம் தொடங்கி இரவு 9 மணிவரை நடைபெறும்.
இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என். ரங்கசாமி, அமைச்சா்கள், திருமலை திருப்பதி தேவஸ்தான மற்றும் அறக்கட்டளை தலைவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.
இந்த திருக்கல்யாண உற்சவத்தையொட்டி புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஹெலிபேடு மைதானத்துக்கு இலவச பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்படும் என்றாா். இந்தப் பேட்டியின்போது மாநிலங்களவை உறுப்பினா் சு.செல்வகணபதி உடனிருந்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தந்தை, தாய், தங்கையைக் கொன்ற வழக்கில் பெங்களூா் பெண் என்ஜினீயா் புதுச்சேரியில் கைது

புதுச்சேரியிலும் ஜூன் 4-ல் பள்ளிகள் திறப்பு

புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு!
புதுச்சேரியில் இளைஞா் வெட்டிக் கொலை
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



