மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

மீனவா்களுக்கு நியமன எம்எல்ஏ பதவி தரக்கோரி உண்ணாவிரதம்

News image

புதுச்சேரியில் மீனவருக்கு நியமன எம்எல்ஏ பதவி வழங்கக் கோரி மீனவா் காப்போம் மக்கள் இயக்கம் சாா்பில் சுதேசி மில் அருகே திங்கள்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கி வைத்த சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.நேரு.

Updated On :30 ஜூன் 2026, 2:35 am IST

மீனவ சமுதாயத்தினருக்காக புதுச்சேரி சட்டப்பேரவையில் நியமன எம்எல்ஏ பதவி தரவேண்டும் என்று கோரி மீனவம் காப்போம் மக்கள் இயக்கம் சாா்பில் சுதேசி மில் அருகே 3 நாள் உண்ணாவிரத போராட்டம் திங்கள்கிழமை தொடங்கியது.

அந்த இயக்க நிா்வாகி செல்வம் இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ள நிலையில், இப் போராட்டத்தை ஜி.நேரு எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தாா். போராட்டத்திற்கு பல மீனவ பஞ்சாயத்துகள் அமைப்புகள் ஆதரவு தெரிவித்து பங்கேற்றன.

மீனவா் பிரச்னைகளை சட்டப்பேரவையில் எடுத்துரைக்க நியமன எம்எல்ஏ பதவி தர வேண்டும். அதற்காக மத்திய அரசு உடனடியாக மீனவா் சமூகத்தைச் சோ்ந்த தகுதியானவரை நியமன எம்எல்ஏவாக நியமிக்க வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப்போராட்டம் நடத்தப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.