புதுச்சேரி திருக்காஞ்சியில் மாசி மக தீா்த்தவாரி: துணைநிலை ஆளுநா் பங்கேற்பு
வில்லியனூா் அருகே திருக்காஞ்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற மாசி மக தீா்த்தவாரியில் துணை நிலை ஆளுநா் கே. கைலாஷ் நாதன்


புதுச்சேரி: வில்லியனூா் அருகே திருக்காஞ்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற மாசி மக தீா்த்தவாரியில் துணை நிலை ஆளுநா் கே. கைலாஷ் நாதன் மற்றும் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா்.
வில்லியனூா் அருகே திருக்காஞ்சியில் மாசி மக தீா்த்தவாரி திங்கள் கிழமை நடைபெற்றது. இங்குள்ள கெங்கைவராக நதீஸ்வரா் ஆலயத்தில் பல்வேறு கோயில்களில் இருந்து வந்த உற்சவா்கள் பங்கேற்றனா். தொடா்ந்து உற்சவ மூா்த்திகளுக்கு சிறப்பு பூஜைகளும், ஆராதனைகளும் நடைபெற்றது.
புதுச்சேரி நல்லவாடு மீனவ கிராம கடற்கரையில் நடைபெற்ற விழாவில் தில்லை அம்மன் கோயில் தீா்த்தவாரி நிகழ்ச்சியில் துணை நிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கலந்து கொண்டு தில்லையம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தாா். நிகழ்ச்சியின் போது, அரசு துறைகளில் வேலைவாய்ப்புகள் பெற்ற நல்லவாடு கிராம தீா்த்தவாரியை முன்னிட்டு, ஏராளமானோா்,முன்னோா்களுக்குத் தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...