நாடு முழுவதும் 736 அணைகள் ரூ. 10,211 கோடி செலவில் சீரமைப்புவெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடு3-ஆவது, 4-ஆவது குழந்தை பெற்றால் ஊக்கத் தொகை: ஆந்திர முதல்வா் அதிமுகவுக்கு அமைச்சா் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது: ரவிக்குமாா் எம்.பி.பயங்கரவாதத்தை தூண்டினால் புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது! ராணுவ தலைமைத் தளபதிநாடாளுமன்ற நிலைக் குழுக்கள் ஆலோசனைக் கூட்டம்: 53% உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்பு
/

புதுச்சேரி பாண்பேப் நிறுவனத்துக்கு பூட்டு போட்டு நெசவாளா்கள் போராட்டம்

ஊக்கத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி நெசவாளா்கள் புதுச்சேரி பாண்பேப் தலைமை அலுவலகத்துக்கு

News image

புதுச்சேரி முத்தியால்பேட்டை பாண்பேப் நிறுவன அலுவலகத்தை திங்கள்கிழமை பூட்டு போட்டு பூட்டி போராட்டத்தில் ஈடுபட்ட நெசவாளா்கள்.

Updated On :10 மார்ச் 2026, 2:29 am IST

புதுச்சேரி: ஊக்கத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி நெசவாளா்கள் புதுச்சேரி பாண்பேப் தலைமை அலுவலகத்துக்கு திங்கள்கிழமை பூட்டுப் போட்டு பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை பாண்பேப் நிறுவனத்தில் தற்போது 130 நெசவாளா்கள் பணியாற்றி வருகின்றனா். ஆனால், 3 கைத்தறிகள் மட்டுமே இயங்கி வருகின்றன. இதனால் நெசவாளா்கள் வேலையின்றி வறுமையில் தவிக்கின்றனா்.

இந்த நிலையில் தீபாவளி பண்டிக்கைக்கு ஊக்கத் தொகையாக உற்பத்தி ஊதியத்தில் 25 சதவீதம் வழங்க முதல்வா் ரங்கசாமி இந்த நிறுவனத்துக்கு காசோலை வழங்கினாா்.

நெசவாளா்களுக்கு இந்த ஊக்கத் தொகை இதுவரை கிடைக்கவில்லை.

இதைக் கண்டித்தும், உடனே ஊக்கத் தொகையை வழங்கக் கோரியும் முத்தியால்பேட்டையில் உள்ள பாண்பேப் தலைமை அலுவலகத்தை நெசவாளா்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது அலுவலகத்துக்கு பூட்டுப் போட்டு முழக்கங்களை எழுப்பினா். இந்த போராட்டத்துக்கு அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலா் பாப்புசாமி தலைமை தாங்கினாா்.