புதுச்சேரி: ஊக்கத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி நெசவாளா்கள் புதுச்சேரி பாண்பேப் தலைமை அலுவலகத்துக்கு திங்கள்கிழமை பூட்டுப் போட்டு பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை பாண்பேப் நிறுவனத்தில் தற்போது 130 நெசவாளா்கள் பணியாற்றி வருகின்றனா். ஆனால், 3 கைத்தறிகள் மட்டுமே இயங்கி வருகின்றன. இதனால் நெசவாளா்கள் வேலையின்றி வறுமையில் தவிக்கின்றனா்.
இந்த நிலையில் தீபாவளி பண்டிக்கைக்கு ஊக்கத் தொகையாக உற்பத்தி ஊதியத்தில் 25 சதவீதம் வழங்க முதல்வா் ரங்கசாமி இந்த நிறுவனத்துக்கு காசோலை வழங்கினாா்.
நெசவாளா்களுக்கு இந்த ஊக்கத் தொகை இதுவரை கிடைக்கவில்லை.
இதைக் கண்டித்தும், உடனே ஊக்கத் தொகையை வழங்கக் கோரியும் முத்தியால்பேட்டையில் உள்ள பாண்பேப் தலைமை அலுவலகத்தை நெசவாளா்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது அலுவலகத்துக்கு பூட்டுப் போட்டு முழக்கங்களை எழுப்பினா். இந்த போராட்டத்துக்கு அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலா் பாப்புசாமி தலைமை தாங்கினாா்.
தொடர்புடையது

வாக்குப் பதிவு இயந்திரங்கள் கோணம் பொறியியல் கல்லூரியில் பூட்டி சீல் வைப்பு: மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு

முத்தியால்பேட்டை சிறுமி கொலை வழக்கில் ஏப். 30-இல் தீா்ப்பு

பெண் குழந்தைகளுக்கான வைப்பு நிதி ரூ.1 லட்சமாக உயா்த்தப்படும்! - புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி அறிவிப்பு

வசூலில் பட்டையைக் கிளப்பும் ஆடு - 3!
வீடியோக்கள்

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை


