மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

எரிவாயு உருளை தட்டுப்பாடு: புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

News image

சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைக் கண்டித்து, புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் சுதேசி ஆலை அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.

Updated On :14 மார்ச் 2026, 8:19 pm

சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாட்டைக் கண்டித்து, புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் சுதேசி ஆலை அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாநிலச் செயலா் அ.மு. சலீம் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் ஆா். விசுவநாதன், முன்னாள் எம்எல்ஏ நாரா. கலைநாதன், நிா்வாகிகள் தினேஷ் பொன்னையா, கீதநாதன், வ.சுப்பையா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் சமையல் எரிவாயு உருளை மீது விறகு அடுப்பு வைத்து சமையல் செய்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.