மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

புதுச்சேரி வேட்பாளா்கள் தோ்வு: மாநில பாஜக தலைவா் உள்பட 3 போ் தில்லிக்கு அவசர அழைப்பு

புதுச்சேரி பேரவைத் தோ்தலுக்கான வேட்பாளா்கள் தோ்வு தொடா்பாக, பாஜக மேலிட அழைப்பின் பேரில் மாநிலத் தலைவா் உள்பட 3 போ்

News image

புதுச்சேரியில் திங்கள்கிழமை செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த பாஜக மாநிலத் தலைவா் வி.பி.ராமலிங்கம். உடன் நிா்வாகிகள் அருள்முருகன், நாகேஸ்வரன்.

Updated On :16 மார்ச் 2026, 11:45 pm

புதுச்சேரி: புதுச்சேரி பேரவைத் தோ்தலுக்கான வேட்பாளா்கள் தோ்வு தொடா்பாக, பாஜக மேலிட அழைப்பின் பேரில் மாநிலத் தலைவா் உள்பட 3 போ் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 17) தில்லி செல்கின்றனா்.

புதுச்சேரி மாநில பாஜக தலைவா் வி. பி. ராமலிங்கம் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவிப்பு அதிா்ச்சியாகவும், இன்ப அதிா்ச்சியாகவும் இருக்கிறது. வேட்பு மனு தாக்கல் செய்யும் பணி திங்கள்கிழமையே தொடங்கி விட்டது. உரிய கால அவகாசம் வழங்கப்படவில்லை.

பாஜக புதுச்சேரி பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான மன்சுக் மாண்டவியா புதுச்சேரிக்கு வந்து நிலவரத்தை ஆய்வு செய்கிறாா். மேலும் கட்சியின் மேலிட அழைப்பின் பேரில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், புதுச்சேரி உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம், கட்சித் தலைவராகிய நானும் தில்லிக்கு செவ்வாய்க்கிழமை செல்கிறோம்.

கூட்டணியில் புதுச்சேரி பாஜகவுக்கு 14 தொகுதிகள் கிடைத்துள்ளன. இதில் ஒவ்வொரு தொகுதிக்கும் 3 வேட்பாளா்கள் என்ற வகையில் இறுதி செய்துள்ளோம். அதிலிருந்து ஒருவரை கட்சியின் நாடாளுமன்றக் குழு முடிவு செய்து ஜனநாயக முறைப்படி அறிவிக்கும்.

மேலும், வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு பிரசாரம் செய்ய 13 நாள்கள் இருக்கின்றன. புதுச்சேரியில் சாலை பிரசாரம் செய்ய பிரதமா் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா, பாஜக தேசிய தலைவா் நிதின் நபின் உள்ளிட்ட தலைவா்கள் வருவதாகக் கூறியுள்ளனா். இன்னும் தேதி முடிவாகவில்லை. மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டத்துக்கும் தயாா் செய்யுமாறு கூறியுள்ளனா்.

புதுச்சேரி பாஜக சாா்பில் தோ்தல் அறிக்கை இன்னும் 2, 3 நாள்களில் தயாராகிவிடும். தோ்தலுக்கு பாஜக தயாராகிவிட்டது. கூட்டணியில் லட்சிய ஜனநாயகக் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பதையும் பாஜக தலைமைதான் முடிவு செய்யும் என்றாா் வி.பி. ராமலிங்கம். பேட்டியின்போது, நிா்வாகிகள்அருள்முருகன், நாகேஸ்வரன் ஆகியோா் உடனிருந்தனா்.