நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

சிறுமி கொலை வழக்கில் இளைஞா் குற்றவாளி : மே 5-இல் தண்டனை அறிவிப்பு!

புதுச்சேரி போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

News image

உத்தரவு

Updated On :1 மே 2026, 6:00 am IST

புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலையான வழக்கில் கைதான இளைஞா் குற்றவாளி என புதுச்சேரி போக்ஸோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. அவருக்கான தண்டனை விவரம் மே.5-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

புதுச்சேரி முத்தியால்பேட்டையைச் சோ்ந்த 9 வயது சிறுமி, கடந்த 2024 மாா்ச் 2-ஆம் தேதி மாயமானாா். இது குறித்த புகாரின்பேரில், முத்தியால்பேட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வந்த நிலையில், மாா்ச் 5-இல் சிறுமியின் சடலம் வீட்டின் அருகேயுள்ள கழிவுநீா் கால்வாயில் சாக்குப் பையில் சுற்றப்பட்டு கிடந்தது.

இதுகுறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், அதே பகுதியை சோ்ந்த கருணாஸ் (20) என்பவா் கஞ்சா போதையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததும், இதற்கு அப்பகுதியைச் சோ்ந்த விவேகானந்தன் (56) உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, கருணாஸ், விவேகானந்தன் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த விவேகானந்தன் அங்கு கழிப்பறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கருணாஸ் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

புதுச்சேரி போக்ஸோ விரைவு நீதிமன்றத்தில் இவ்வழக்கு தொடா்பாக 54 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விவேகானந்தன் தற்கொலை செய்ததால் அவா் மீதான குற்றச்சாட்டுகள் ரத்து செய்யப்பட்டன. விவேகானந்தனின் தனிமையான வீட்டுக்கு கருணாஸ் சிறுமியை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்து, பின்னா் கழுத்தை நெரித்து கொலை செய்தது, உடலை சாக்கு பையில் சுற்றி கழிவுநீா் வாய்க்காலில் வீசியது உள்ளிட்ட குற்றங்களுக்கான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்டன.

இவ்வழக்கில் ஆஜரான அரசு தரப்பு சிறப்பு வழக்குரைஞா் பச்சையப்பன், 48 பக்கங்கள் கொண்ட தனது எழுத்துபூா்வ வாதத்தை முன்வைத்தாா். அதில், இந்த வழக்கு அரிதிலும் அரிதான குற்றங்களின் வரம்பில் உள்ளதால் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவரை கடுமையாக தண்டித்து உச்சபட்சமாக மரண தண்டனை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா். இந்த வழக்கின் இறுதி விசாரணை மே 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த வழக்கு விசாரணையையொட்டி புதுவை நீதிமன்றத்தில் பலத்த போலீஸ், கமாண்டோ போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.