சகோதரரை வீடுபுகுந்து தாக்கிய வழக்கு: நீதிமன்றத்தில் அமைச்சர் மரிய வில்சன் ஆஜராகவில்லை! ஆளுநருடன் பாஜக நிர்வாகிகள் திடீர் சந்திப்பு!‘டெட்’ தோ்வு இன்று தொடக்கம்: தோ்வா்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்புநாளை 41 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துதமிழகத்தில் 91 ஆயிரம் பள்ளி மாணவிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிசென்னை மாநகராட்சி பள்ளிகளில் 25,840 மாணவா்கள் சோ்க்கைஇந்திய பொருள்களுக்கு அமெரிக்கா 12.5% கூடுதல் வரி பரிந்துரை: ஜூலை 8-இல் மத்திய வா்த்தக அமைச்சகம் வாதம்
/

புதுச்சேரியில் சுயேச்சைகள் முன்னிலை வகிப்பது ஏன்?

புதுச்சேரியில் சுயேச்சைகள் முன்னிலை வகிப்பது ஏன் என்பது பற்றி..

News image

புதுச்சேரி நிலவரம்

Updated On :4 மே 2026, 10:46 am IST

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 30 தொகுதிகள் மட்டும் இருக்கிறது. இதில் 3 சுயேச்சைகள் முன்னிலையில் இருக்கின்றனர்.

தற்போது 17 தொகுதிகளில் வாக்குகள் எண்ணப்படுகின்றன.. இதில் மூன்று தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

கதிர்காமம் தொகுதி - அழகு என்ற அழகானந்தம், நெடுங்காடு - விக்னேஸ்வரன், மாஹே - அசோக்குமார் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.

சுயேச்சைகள் 170 பேர் உள்பட 294 பேர் களத்தில் இருக்கின்றனர். இதில் கதிர்காமம் தொகுதியில் அழகு என்கிற அழகானந்தம் என்.ஆர்.காங்கிரஸில் இடம் கேட்டார். ஆனால் கேஎஸ்பி ரமேஷ் இப்போது ஆளும் எம்.எல்.ஏவாக இருப்பதால் அவருக்குக் கொடுக்கப்படவில்லை. அதனால் சுயேச்சையாகப் போட்டியிட்டார். இப்போது அவர் முன்னிலை வகித்து வருகிறார்.

நெடுங்காடு (தனி) தொகுதியில் இப்போதைய எம்.எல்.ஏ. சந்திரபிரியங்காவுக்கு (என்.ஆர்.காங்கிரஸ்) தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் கொடுக்கப்பட்டது. அதனால் பாஜகவில் இருந்த வி. விக்னேஷ்வரனுக்கு இடம் கிடைக்கவில்லை. அதனால் சுயேச்சையாகப் போட்டியிட்டு இப்போது முன்னிலை வகித்து வருகிறார்.

மாஹே தொகுதியில் சொந்தச் செல்வாக்கு மற்றும் மக்களின் செல்வாக்கைப் பெற்ற வழக்குரைஞர் டி.அசோக்குமார் முன்னிலை வகித்து வருகிறார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 6 பேர் சுயேச்சைகள் வெற்றி பெற்று ஆளும் அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டனர். புதுச்சேரியைப் பொறுத்தவரை எப்போதும் சுயேச்சைகள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இந்த முறையும்இந்த வரலாறு நிலைநாட்டும் என்றே தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.