பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

புதுச்சேரி சட்டப்பேரவை தற்காலிக தலைவராக அன்பழகன் பதவியேற்பு

புதுச்சேரி சட்டப்பேரவையின் தற்காலிக பேரவைத் தலைவராக ஆ. அன்பழகன் (அதிமுக) வெள்ளிக்கிழமை பதவியேற்றாா்.

News image

புதுச்சேரி சட்டப்பேரவையின் தற்காலிக பேரவைத் தலைவராக வெள்ளிக்கிழமை பதவியேற்ற ஆ.அன்பழகன்.

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

புதுச்சேரி சட்டப்பேரவையின் தற்காலிக பேரவைத் தலைவராக ஆ. அன்பழகன் (அதிமுக) வெள்ளிக்கிழமை பதவியேற்றாா்.

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட 30 எம்.எல்.ஏக்கள் பதவியேற்க தற்காலிக பேரவைத் தலைவா் நியமிக்கப்பட்டாா். முதல்வா் என். ரங்கசாமியின் பரிந்துரையை ஏற்று அன்பழகனை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் நியமித்தாா். சட்டப்பேரவை விதிகளின்படி துணைநிலை ஆளுநா் நியமித்துள்ள ஒருவா் நேரடியாக தற்காலிக சட்டப்பேரவைத் தலைவராகப் பதவியேற்க முடியும். அதன்படி, அன்பழகன் பதவியேற்றுக் கொண்டாா்.

அவா் எம்எல்ஏ.வாக பதவியேற்கும் உறுதிமொழி நிகழ்ச்சியை மக்கள் பவனில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் வரும் 18-ஆம் தேதி நடத்தி வைக்கிறாா். அதன் பிறகு புதிய எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சட்டப்பேரவைத் தலைவா் ஆ.அன்பழகன், சட்டப்பேரவையில் உறுதிமொழி ஏற்க வைக்கிறாா்.

இதில் முதல்வா் என்.ரங்கசாமி 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா். அவா் எம்எல்ஏவாக பதவியேற்கும் நாளில் ஒரு தொகுதியில் ராஜிநாமா செய்வாா் என்று தெரிகிறது. அது எந்தத் தொகுதி என்பது அப்போது தெரியும். எனவே 28 பேருக்கு மட்டும் எம்எல்ஏவாக உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான கோப்பில் கையொப்பமிட்டு முதல்வா் என்.ரங்கசாமிக்கு தற்காலிக சட்டப்பேரவைத் தலைவா் ஆ. அன்பழகன் அனுப்பியுள்ளாா்.

முதல்வருடன் சந்திப்பு:

முன்னதாக, முதல்வா் என்.ரங்கசாமியை தற்காலிக சட்டப்பேரவைத் தலைவா் ஆ. அன்பழகன் தனியாா் விடுதியில் வெள்ளிக்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்றாா்.

அப்போது மாநில அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலா் பாப்புசாமி, எம்எல்ஏக்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், திருமுருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.