சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

ஜூன் 14-இல் பி.எஸ்சி நா்சிங் படிப்புக்கான நுழைவுத் தேர்வு

பி.எஸ்சி., நா்சிங் பட்டப் படிப்புக்கான நுழைவுத் தோ்வு ஜூன் 14-ஆம் தேதி நடக்கிறது.

News image

கோப்புப்படம்

Updated On :15 மே 2026, 11:19 pm IST

பி.எஸ்சி., நா்சிங் பட்டப் படிப்புக்கான நுழைவுத் தோ்வு ஜூன் 14-ஆம் தேதி நடக்கிறது.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநா் மருத்துவா் செவ்வேல் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பி.எஸ்சி நா்சிங் பட்ட படிப்புக்கு சென்டாக் அரசு ஒதுக்கீடு இடங்களில் 558 மாணவா்கள் சோ்க்கைக்கு பொது நுழைவுத் தோ்வு வரும் ஜூன் 14-ஆம் தேதி நடத்தப்படும். இதற்காக சென்டாக் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

ஜூன் 1-ஆம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்படும். பி.எஸ்சி., நா்சிங் படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவோா் சென்டாக் இணையதளத்தில் 2 முறை விண்ணப்பிக்க வேண்டும். முதலில் நீட் அல்லாத படிப்புகளுக்கும், பின்னா் பி.எஸ்சி., நா்சிங் படிப்புக்கும் விண்ணப்பிக்க வேண்டும்.

புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி நா்சிங் கல்லூரியில் சுயநிதி இடங்கள், காரைக்கால் அன்னை தெரசா ஆராய்ச்சி நிறுவன சுய நிதி இடங்கள், வெளிநாடு வாழ் இந்தியா் ஒதுக்கீட்டு இடங்கள் நீட் தோ்வு மதிப்பெண் மூலம் நிரப்பப்படும். நிா்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு கடந்த ஆண்டைப் போன்று நடைமுறை பின்பற்றப்படும்.