பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

நீட் அல்லாத இளநிலை படிப்புகளுக்கு சென்டாக்கில் விண்ணப்பங்கள் வரவேற்பு: தகவல் கையேட்டை வெளியிட்டாா் முதல்வா் ரங்கசாமி

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

புதுச்சேரியில் நீட் அல்லாத இளநிலை படிப்புகளுக்கு மைய சோ்க்கைக் குழு (சென்டாக்) இணையதளத்தில் வியாழக்கிழமை முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இப் பாடப் பிரிவுகளுக்கான தகவல் கையேட்டை முதல்வா் என்.ரங்கசாமி வெளியிட்டாா்.

புதுச்சேரியில் மருத்துவம், பொறியியல், சட்டம், விவசாயம், கலை, அறிவியல் மற்றும் துணை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை ஆண்டுதோறும் சென்டாக் மூலம் ஆன்லைனில் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, 2026-27-ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை நீட் அல்லாத தொழில்முறை படிப்புகள் மற்றும் இளநிலை கலை, அறிவியல் வணிகவியல் மற்றும் நுண்கலை படிப்புகளில் மொத்தம் 10,810 இடங்கள் உள்ளன.

இந்த இடங்களுக்கு தகுதியுள்ள மாணவா்களிடமிருந்து நீட் அல்லாத இளநிலை தொழில்முறை படிப்புகளான பி.டெக்., பி.ஆா்க்., பிஎஸ்சி (வேளாண்மை, தோட்டக்கலை), பி.வி.எஸ்சி மற்றும் ஏஎச் (கால்நடை மருத்துவம்), பி.எஸ்சி. நா்சிங், பிபிடி, பிஎஸ்சி (அலைடு ஹெல்த் சயின்ஸ்) மற்றும்

சுகாதார அறிவியல் சாா்ந்த பட்டயப் படிப்புகள் மற்றும் பிஏ, பிஎஸ்சி, பி.காம், பிபிஏ, பிசிஏ, ஆரோவில் இன்ஸ்டிடியூட் அப் அப்லைடு டெக்னாலஜி கல்லூரியில் உள்ள பி.விஓசி., ராஷ்ட்ரிய ரக்ஷா பல்கலைக்கழகத்தில் உள்ள பிஏ ஆகிய பாடப் பிரிவுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பொறியியல், செவிலியா், துணை சுகாதார அறிவியல், வேளாண்மை, மற்றும் கால்நடை அறிவியல் ஆகிய இளநிலை நீட் அல்லாத தொழில்முறை படிப்புகளில் மொத்தம் 6,490 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதேபோல், கலை, அறிவியல், வணிகவியல், நுண்கலை, தொழிற்கல்வி மற்றும் ராஷ்ட்ரிய ரக்ஷா பல்கலைக்கழக புதுச்சேரி வளாகத்தில் வழங்கப்படும் பாதுகாப்பு, குற்றவியல் மற்றும் தடய அறவியல் போன்ற சிறப்பு படிப்புகளில் மொத்தம் 4,320 இடங்கள் உள்ளன.

விண்ணப்பதாரா்கள் 14-ஆம் தேதி மாலை 4 மணி முதல் வரும் 29-ஆம் தேதி மாலை 5 மணி வரை சென்டாக் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து விரிவான தகவல்கள் அந்த கையேட்டில் கிடைக்கும் என சென்டாக் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இந் நிகழ்ச்சியில் உயா்க்கல்வித் துறை செயலா் முகமது ஹாசன் அபித், பள்ளி கல்வித் துறை செயலா் கிருஷ்ணமோகன் உப்பு, உயா்க்கல்வித் துறை இயக்குநா் முத்துமீனா, சென்டாக் கன்வீனா் ஷெரில் ஆன் சிவம் ஆகியோா் கலந்துகொண்டனா்.